September 16, 2026
  • September 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வடிவேலுவுக்கே விருப்பம் இல்லாத நேசமணி டிரெண்டிங்
May 30, 2019

வடிவேலுவுக்கே விருப்பம் இல்லாத நேசமணி டிரெண்டிங்

By 0 1240 Views

இரண்டு நாள்களாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டிரெண்டிங் ஆகி வருகின்றன ‘நேசமணி’, மற்றும் ‘பிரே ஃபார் நேசமணி’ காமெடி மீம்ஸ்கள்.

ஒரு சுத்தியலில் ஆரம்பித்த இந்த விஷயம் இன்று எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வடிவேலுவின் வற்றாத ‘பிரண்ட்ஸ்’ காமெடியான நேசமணி எந்தப்படத்திலும் இல்லாத அளவில் டிரெண்டாகி வருகிறது.

ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதுபோன்ற காமெடி மீம்ஸ்கள் பல்வேறு நாட்டு நடப்புகளை மக்களின் கவனத்திலிருந்து மறைக்கவே ஏற்படுத்தப்படுபவை என்பது வெளிப்படையான விஷயம். 

ஆக, கடந்த இரண்டு தினங்களாக இதைத் தவிர மக்கள் எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை என்பதுதான் சிரிப்பைத் தாண்டிய கசப்பான உண்மை. 

உண்மை இப்படி இருக்க, இந்த நேசமணி டிரெண்டிங் குறித்து அதன் நாயகரான வடிவேலுவுக்கே புரிதல் எதுவும் இல்லையென்பதும், அதை அவர் ரசிக்கவில்லையென்பதும் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த குரல் பேட்டியின் மூலம் தெரிகிறது.

அது கீழே…