July 13, 2025
  • July 13, 2025
Breaking News
June 1, 2019

இளையராஜாவையும் எஸ்பிபியையும் இணைத்த தமிழரசன்

By 0 883 Views

சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்தப் படத்துக்காக ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜா இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார்.

எஸ்.பி.பி..? ஆமாம். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலைக் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல் விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெலடிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். என்ற வரிசையில் பழனிபாரதி எழுதியிருக்கும் ‘வா… வா… என் மகனே…’ என்னும் இந்தத் தாலாட்டு பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

‘தமிழரசன்’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Tamilarasan Song Composing

Tamilarasan Song Composing