April 20, 2024
  • April 20, 2024
Breaking News
May 30, 2019

ஜெய்யை விஜய் ஆக மாற்றிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி

By 0 702 Views
SAC

SAC

‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது.

இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தனது 25-வது படம் பற்றி ஜெய் கூறியது –

“துரு, துரு, ஜாலி, சுவாரஸ்யம் கலந்து உருவாகும் ‘லவ்மேட்டர்’ திரைப்படம் எனது 25 வது படமாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பல வெற்றிப் படங்களைத் தந்தது மட்டுமல்லாமல், விஜய்யை வைத்து பல இளமை ததும்பும் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க 20-வயதுக்குட்பட்ட இளம் உதவியாளர்களுடன் எஸ்.ஏ.சி 20 வயது இளைஞரைப் போல செட்டில் பணியாற்றியது வியக்க வைத்தது. இளம் தலைமுறையினருக்குப் பிடித்த அம்சங்களுடன் இந்தப்படம் உருவாகிறது.

வெளியில் கண்டிப்பான இயக்குனர் என்ற பெயர் எஸ்.ஏ.சி.க்கு உண்டு. ஆனால் எல்லோரையும் இயல்பாக விட்டு ஜாலியாக படமாக்கிய விதம் அருமை. அதனால் நான் மட்டுமல்லாது எல்லோரும் ஒரு ஜாலி மூடோடு நடித்து வருகிறோம்.

விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி வெற்றிபெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே லவ் மேட்டர் படத்தில் ‘கார்த்தி’ என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக ஒத்துக் கொண்டார். அதில் எனக்கு மகிழ்ச்சி..!”

‘லவ் மேட்டர்’ படத்துக்கு இசை:சித்தார்த், ஒளிப்பதிவு :ஜீவன், தயாரிப்பு&இயக்கம் :எஸ்.ஏ .சந்திரசேகரன்.