September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தொலைக்காட்சி நடிகை திடீர் தற்கொலை

by on September 9, 2020 0

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்துகொண்டார். மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Read More

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

by on September 8, 2020 0

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.   மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.   எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில்,  ஸ்புட்னிக்-v என்ற ரஷ்ய தடுப்புசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    இதுதொடர்பாக, […]

Read More

கொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு

by on September 8, 2020 0

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.  தமிழகத்தின்் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா […]

Read More

தெலுங்கின் முன்னணி நடிகர் திடீர் மரணம்

by on September 8, 2020 0

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உத்தமபுத்திரன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை. இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு […]

Read More

கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு குறித்த சர்ச்சை

by on September 7, 2020 0

பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.   இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களாக டுவிட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.   மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.  […]

Read More

பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணத்தை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்

by on September 7, 2020 0

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இயக்குனர் நடிகர் நட்ராஜ் மகள் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது. அததன் பிறகு பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல்்் வந்துவிட்டதாக  அனைத்து மீடியாக்களும்் எழுதின. இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார் விஷ்ணு. இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா […]

Read More

பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி

by on September 6, 2020 0

இந்தியாவில் கடந்த ஆண்டு மத்தியில் இருந்தே பொருளாதார மந்த நிலை ஏற்படத்தொடங்கியது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தது.    இந்நிலையில் கொரோனா காரணமாக பொது ஊரடங்கால் நாட்டின் ஜிடிபி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.    கடந்த காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதமாக  குறைந்துள்ளது.   இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான ஜிடிபி வீழ்ச்சி ஆகும். மேலும், மத்திய அரசிடம் […]

Read More

பிக் பாஸ் ஆரவ் காதலியை கைப்பிடித்தார்

by on September 6, 2020 0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்து, சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.    ஆரவ்வுக்கும் கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.   ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது பெற்றோர் சம்மதத்துடன்அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண […]

Read More

வசமாக சிக்கிக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

by on September 6, 2020 0

யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, கிக்கி விஜய், சிரிஷ் உள்ளிட்டோர் அணிந்திருந்த டி சர்ட் வாசகமான #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் இன்று முழுதும் வைரலாகி வந்தது தெரிந்திருக்கும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு எப்போதுமே குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த டிரெண்டிங்கை பார்த்த தமிழ் பொண்ணு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் அந்த டி சர்ட்டை வாங்கி அணிந்து கொண்டு போட்டோ போட்டிருந்தார். அதைப் பார்த்த பலரும் ‘இந்த வீடியோ-விலே இருக்கறவர்தானே ஐஸ்வர்யா ராஜேஷ்..? […]

Read More