September 13, 2026
  • September 13, 2026
Breaking News
October 6, 2020

கபடதாரி முதல் பார்வையை சூர்யா வெளியிட்ட ரகசியம்

By 0 767 Views

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.

தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

Kapatadaari first look

Kapatadaari first look

இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு எதிர்பாராத பரிசு வழங்க நினைத்த
‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின்  முதல் பார்வையை இன்று வெளியிடுவதாக அறிவித்ததோடு, சிபிராஜிக்கு பிடித்த ஹீரோக்களில்
ஒருவரான சூர்யாவே, பஸ்ட் லுக்கை வெளியிடும்படியும் செய்துள்ளார்கள்.

இது பற்றி சிபிராஜுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நேற்று இரவு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டதும், சிபிராஜ்
சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். அவரைப் போல அவரது ரசிகர்களும் ‘கபடதாரி’ பஸ்ட் லுக் ரிலீஸை கொண்டாடி
வருகிறார்கள்.

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இணைந்து
தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சிமோன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.