July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குனர் சீனு ராமசாமிக்கு நேற்று இன்னொரு திருமணம் செய்துவைத்த ட்விட்டர்
October 7, 2020

இயக்குனர் சீனு ராமசாமிக்கு நேற்று இன்னொரு திருமணம் செய்துவைத்த ட்விட்டர்

By 0 627 Views

இன்றைக்கு சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாகவே தங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அதில் அவ்வப்போது சிக்கல்களும் வருவதுண்டு. முக்கியமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்து அதில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இயக்குனர் சீனு ராமசாமி வைத்திருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அவருக்கு நேற்று தான் திருமணம் ஆனதாக பதிவாகி இருக்கிறது.

இதைப் பார்த்து பதறிப் போய் பலரும் அவரிடம் போன் செய்து விசாரித்ததில் அவருடைய டுவிட்டர் கணக்கை புதுப்பிக்க போய் இப்படி ஒரு தவறான தகவல் அதில் பதிந்து விட்டதாக தன்னுடைய பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

“எனக்கு 13 வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆகி மனைவி மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் அக்கவுண்ட் அப்டேட் செய்ய போய் இப்படி ஆகிவிட்டது என்று தன் விளக்கத்தை அவர் கூறியிருக்கிறார்.

இப்படி எல்லாமா குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பது டிவிட்டர்..?

Seenu Ramasamy twitter account

Seenu Ramasamy twitter account