April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 42 வருடங்களுக்கு பின் பிரச்சனைக்குள்ளான அவள் அப்படித்தான் படத்தலைப்பு
October 5, 2020

42 வருடங்களுக்கு பின் பிரச்சனைக்குள்ளான அவள் அப்படித்தான் படத்தலைப்பு

By 0 476 Views

சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.

கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரிலே காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. சிலுக்கு மாதிரியான நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். நடிகையை தயாராகாத நிலையில் டைட்டிலை பட்டம் எப்படி பிடித்தார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்து வந்தது.

மறைந்த இயக்குநர் ருத்ரய்யா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான படம் அவள் அப்படித்தான். அந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் பேசிய படங்களில் முக்கியமான படமாக, இந்தப் படம் அமைந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அந்தப் படத்தை தற்போது பாணா காத்தாடி இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டு அந்த ‘அவள் அப்படித்தான்’ என்ற தலைப்பை தன் கம்பெனி பெயரில் பதிவு செய்து வைத்திருப்பதாக கேள்வி.

ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிம்பு, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா நடிக்க பேச்சு வார்த்தை எல்லாம் நடந்து வந்தது.

இதுகுறித்து பத்ரி வெங்கடேஷிடம் கேட்டபோது, ” ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்து முதல்முறையாக படம் இயக்கியது ருத்ரய்யா தான். நானும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருந்து  சினிமாவுக்கு வந்ததால் அந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது.

படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை. ருத்ரய்யா தற்போது உயிருடன் இல்லை. அவரது மகள் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால், அவருக்கும் அது பற்றி தெரியுமா என உறுதியாக தெரியவில்லை.

படத்தைக் காட்சிக்கு காட்சி அப்படியே ரீமேக் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் எந்த தடையும், இடையூறும் இல்லாமல் எடுக்க விரும்புகிறேன். எனது அனைத்து படங்களுக்கும் யுவன் இசையமைத்திருப்பார்.

ஆனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க விரும்புகிறேன். இந்த டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பக்காவா முடிச்சிட்டேன்.. இதுக்கிடையிலே இந்த டைட்டிலுக்கு இப்படி ஒரு டிமாண்ட் வந்திருப்பது ஹேப்பி. வேறென்ன சொல்ல..?” என்றார்.

இதுகுறித்து சித்ரா லட்சுமணன் என்ன சொல்லப் போகிறார்..?