சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனாவார். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, உயிருக்கு உயிராய் காதலித்த நடிகை மேக்னா ராஜை, 2017 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் சிரஞ்சீவி சார்ஜா.
வாழ்க்கை, மகிழ்வின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சென்ற ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
Actress Meghna Raj with Hubby’s Cut out
சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த போது அவரது காதல் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார்.
காதல் கணவர் சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது, அவரது உடலை மேக்னா ராஜ் கட்டியணைத்து வேதனையின் வெடிப்பில் கதறி அழுதது, அப்போது அத்தனை ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் பெரும் வைரலாகின.
சிரஞ்சீவி சார்ஜா இறந்து மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், நடிகை மேக்னா ராஜிக்கு பெங்களூரூவில் உள்ள சிரஞ்சீவி சார்ஜா வீட்டில் வைத்து, நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது பேரன்புக் கணவர் இல்லாத குறையை போக்கிட, தனது கணவரின் ஆளுயர கட் அவுட்டை, வளைகாப்பு நிகழ்ச்சியில் தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகிலேயே வைத்து, பெரும் மகிழ்வு கொண்டார்.
Actress Meghna Raj
இது சம்பந்தமான புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள மேக்னா ராஜ், “ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பை, நமது குழந்தை வடிவில் கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றும், நான் நமது குழந்தை மூலம் உங்களைக் காண்பதற்காகக் காத்திருக்கிறேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உலகில் ஏன் இப்படி நடக்கிறது என்கிற ஒற்றை கேள்விக்கு சில விஷயங்களில் பதிலே இல்லை.