September 25, 2026
  • September 25, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

அமலா பால் எங்கள் கடவுள் – நெகிழ்ந்த கடாவர் பட இயக்குனர்

by on August 9, 2022 0

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை […]

Read More

சீதா ராமம் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2022 0

படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஏதோ இந்து மதப்பற்றுள்ளவர் இயக்கிய படமாகத் தோன்றலாம். அதனாலேயே இந்தப்படத்தின மீதான நம்பகத் தன்மை குறையலாம். ஆனால், படம் பார்த்த பின் அந்தக் கணிப்பு சுக்கு நூறாக உடையும். ஹனு ராகவபுடி இயக்கி இருக்கும் மதங்களைக் கடந்த, அத்தனை சீக்கிரம் காலத்தால் மறக்க முடியாத படம் இது. சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதலையும் வீரத்தையும் நமக்குத் தெரிந்த சரித்திரப் பின்னணியில் சொல்ல முடிந்தால் அதுதான் சீதா ராமம். காதலின் வீரியம் கடிதத்தில் பன் […]

Read More

உதயநிதிக்கு நன்றி தெரிவித்த அமீர்கான்

by on August 8, 2022 0

“நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் […]

Read More

வட்டகரா திரைப்பட விமர்சனம்

by on August 8, 2022 0

“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை… தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை…” என்று வாலி எழுதிய வைர வரிகள் இவ்வுலகத்திற்கு எப்போதும் பொருந்தும்.   அப்படி பணம் இருந்தால் மட்டுமே தங்களால் வாழ்க்கையைத் தொடர முடியும் என்ற பரிதவிப்பில் இருக்கும் நால்வர் ஒரு கட்டத்தில் ஒன்று சேர அவர்கள் பணத்துக்காக மேற்கொள்ளும் முயற்சிதான் இந்த படம்.   நெடுஞ்சாலை ஒன்றில் புலரும் பொழுதில் காருக்குள் உறங்கும் நால்வரில் கண்விழித்து எழும் கண்ணன் மாதவன் உடன் உறங்கிக் […]

Read More

லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்

by on August 6, 2022 0

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதால் இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளம் வழியாக தமிழ் பேசி வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்தான் இது. வேறு வேறு துறையில் இருக்கும் நால்வர் பகுதி நேர தொழிலாக அசைன்மென்ட் பெற்று பெரிய வீடுகளில் டாகுமெண்ட்களைக் கொள்ளையடிக்கும் வேலையும் செய்து வருகிறார்கள்.. அப்படி ஒரு பெரிய வீட்டில் ஒரு பொருளைத் தேட போன இடத்தில் அசந்தர்ப்பமாக அந்த வீட்டில் படித்துக் கொண்டிருந்த சிறுமியை பாதுகாப்பு கருதி கொல்ல […]

Read More

எண்ணித் துணிக திரைப்பட விமர்சனம்

by on August 5, 2022 0

இன்டர்நேஷனல் மாஃபியாக்களிடம் ஏற்படும் பிரச்சனை எளிய மனிதர்களின் வாழ்க்கையில் வந்து விளையாட, தன் வாழ்க்கை பாதிக்கப்பட்ட எளிய மனிதன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் அல்லது எதிரியைக் கொல்கிறான் என்பது கதை. இலகுவான மற்றும் காதல் நாயகனாக வேடங்களை ஏற்ற ஜெய்க்கு இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் ஒரு ஆக்ஷன் ஹீரோவின் படம் என்றால் அவனுடைய அறிமுகமே அதிபுதிரியாக இருக்கும். இதில் அவர் ஒரு எளிய மனிதன் என்று காட்டுவதற்காக இயல்பான […]

Read More

பொய்க்கால் குதிரை திரைப்பட விமர்சனம்

by on August 5, 2022 0

காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஆற்றலால் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்கிறான் என்பது கதையின் மையப்புள்ளி. அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கதையின் நாயகனாக வரும் பிரபுதேவாவின் மூலதனமே அவரது கால்கள்தான் என்பது உலகுக்கு தெரியும். ஆனால் அவரை ஒற்றைக் காலுடன் வாழ்பவராகக் காட்டுவதற்கு இயக்குனருக்கு எப்படித்தான் மனது வந்ததோ? விபத்தில் ஒரு காலை இழந்த பிரபுதேவா தன் ஒற்றைக் காலுடன் வாழ்ந்து வர அவரது வாழ்க்கையின் பிடிப்பாக […]

Read More

அப்பாதான் உங்கள் வில்லன் என்றார் முத்தையா – விருமன் விழாவில் கார்த்தி கல கல

by on August 4, 2022 0

நேற்று மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவில்… நடிகர் கார்த்தி பேசும்போது, என்ன மாமா சௌக்கியமா? இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள். அப்பொழுது, அமீர் சார் 10 பேரை அடிக்கும் அளவிற்கு தயாரானால் தான் […]

Read More

விஜய் சேதுபதி வந்தபோது இருந்த நிலைமை இன்று எங்களுக்கு இல்லை

by on August 3, 2022 0

Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Read More

பெண்களையும், பக்தர்களையும் பரவசப்படுத்தும் ஆன்மீக வீடியோ பாடல் ’படவேட்டம்மன்’

by on August 3, 2022 0

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குநர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம் அமைக்க, வளர்ந்து வரும் இளம் திரைப்பட நடிகை ஹரினி […]

Read More