ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் ‘வாகா’ படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் ‘சினம்’ படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது”.

‘சினம்’ கதைக்கான ஆரம்பப்புள்ளி என்ன என்பது குறித்து கேட்ட போது, “’வாகா’ படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் தந்தை, என் முந்தைய படமான ‘ஹரிதாஸை ‘ குறிப்பிட்டு, அதில் இருக்கும் ‘எமோஷன்ஸ்’தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் ‘சினம்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது.

த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்கு பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் ‘சினம்’ இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள்” என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் ஆர். விஜயகுமார் தயாரிப்பில், GNR குமரவேலன் இயக்கி இருக்கும் படம் ‘சினம்’. அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.