September 25, 2026
  • September 25, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை

by on August 3, 2022 0

சென்னை 3 ஆகஸ்ட் 2022: 93 வயது முதியவரின் மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் பல கடுமையான அடைப்புகளும் அவரது வலது கரோடிட் தமனியில் 99% அடைப்பும் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி பலமுறை சமநிலையின்மையால் கீழே விழுவதும், அதிக மயக்கம் மற்றும் நீண்ட ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் மேலும் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவால் அவதிப்பட்டார். கரோடிட் தமனிகள் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் ஆகும், அவை மூளை, […]

Read More

பொன்னியின் செல்வனுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்யும் அவெஞ்சர்ஸ் பட வல்லுநர்

by on August 2, 2022 0

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் பொன்னி நதி பாடல் யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் […]

Read More

‘விஜயானந்த்’தை தமிழில் வெளியிடுவதில் பெருமிதம்- நெகிழும் கன்னட தயாரிப்பாளர்

by on August 2, 2022 0

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர். டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். […]

Read More

எஸ்ஏசி வீட்டு பொருள்கள் ஜப்தி – சட்டப்படி குற்றத்துக்கு உள்ளான சட்டப்படி குற்றம்

by on August 1, 2022 0

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி சம்பளம் வாங்கி நடித்து வருகிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், இப்படியொரு சிக்கல் எப்படி ஏற்பட்டது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைபடத்தின் விளம்பர […]

Read More

லெஜண்ட் ‘ சரவணனுக்கு ஒரு கடித விமர்சனம்…

by on August 1, 2022 0

நீங்க டாம் குரூஸா இல்ல டாம் அண்ட் ஜெர்ரியா..? சரவணன் அண்ணாச்சி… வணக்கம்… வாழ்த்துக்கள்..! நான் உங்க லெஜண்ட் படம் பார்த்தேன். அந்த ஆர்வம் தாள மாட்டாமதான் இந்தக் கடிதத்தை எழுதறேன்… நீங்க ஜெயிச்சிட்டீங்க… உங்க கனவை… ஆசையை… பெரிய திரையில்… உங்க பாணியிலேயே சொல்லப்போனா பிரம்மாண்டமாய்… அதுவும் உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்ததில நீங்க ஜெயிச்சிட்டீங்க… அதே மாதிரி எங்க எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சிட்டீங்க… அதாவது உங்களுடைய விளம்பர படங்கள்ள உங்கள ஹீரோவா பார்த்து, […]

Read More

ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தியின் ’விருமன்’ பட பாடல்கள் மற்றும் டிரைலர்

by on August 1, 2022 0

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் […]

Read More

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம்

by on July 31, 2022 0

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.  மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் […]

Read More

குலு குலு திரைப்பட விமர்சனம்

by on July 31, 2022 0

சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் 50/50 என்ற அளவில்தான் அவர் ஹீரோயிஸத்தையும், நகைச்சுவையையும் கலந்து கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால், இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே இவ்வளவு சீரியஸான ஒரு படத்தை நாம் பார்த்ததில்லை.   ஒரு உலக அரசியல் பேசும் கனமான படம் இது. மொழி தெரியாதவர்களின் அவஸ்தையையும், ஒரு மொழி அழிக்கப்பட்டால் ஒரு இனமே எப்படி பாதிக்கப்படும் என்பதும்தான் கதை கரு. உச்ச பட்ச ஹீரோக்கள் நடிக்க கூடிய அளவில் கனமான இந்தக் […]

Read More

விக்ராந்த் ரோனா திரைப்பட விமர்சனம்

by on July 30, 2022 0

இன்றைக்கு பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டி விட்டது. ஆனால், அதுவே ஆறு ரூபாய்க்கு விற்ற காலத்தில் நடக்கிற கதை என்கிறார்கள். அதை ஒரு ஃபேன்டஸி திரில்லராகக் கொடுத்திருக்கிறார் எழுதி இயக்கி இருக்கும் ‘அனுப் பண்டாரி’. கம்ரூட் என்ற மலை கிராமத்தை நமக்கு அறிமுகப்படுத்தும்போதே கிலி தொற்றிக் கொள்கிறது. அங்கே காரில் வரும் தாயையும் அவள் குழந்தையையும் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி கொல்வதுடன் படம் தொடங்குகிறது. அந்தக் கிராமத்திலுள்ள வீட்டில்தான் தன் மகளின் கல்யாணத்தை நடத்துவேன் […]

Read More