April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • பல்சுவை
  • ஆர்எம்கேவியின் இயற்கை சாயம் மற்றும் எடை குறைந்த லினோ பட்டுச் சேலைகள்
September 14, 2022

ஆர்எம்கேவியின் இயற்கை சாயம் மற்றும் எடை குறைந்த லினோ பட்டுச் சேலைகள்

By 0 590 Views

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் கலெக்ஷன் ஆகும்.

1856-ல் செயற்கை முறையில் சாயமிடுதல் அறிமுகப்படுத்தப்படும் வரை அனைத்து இழைகளும் இயற்கை முறையிலேயே சாயமிடப்பட்டு வந்தன. செயற்கைச் சாயங்கள் வசதியாகவும், செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் விரைவிலேயே அவை இயற்கை உட்பொருட்களுடன் கூடிய நிறமூட்டிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டன.

செயற்கைச் சாயங்கள் காரணமாக நச்சுக் கழிவுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுவது தற்போது கண்கூடாக அனைவராலும் உணரப்படுகிறது.

இயற்கை சாயங்கள் மற்றும் சாயத்தை பிணைக்கும் சாதனமான மோர்டன்ட்கள் ஆகியவற்றை உருவாக்கும் பண்டைய வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. அல்லது சிறு குழுக்களில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே பின்பற்றும் கலையாக இவை ஆகிவிட்டன. ப்ளாக் பிரிண்டட் காட்டன் சேலைகள் போன்ற இயற்கை முறையில் சாயமிடப்பட்ட பெரும்பாலான சேலைகள் நெய்யப்பட்ட பிறகே நிறமூட்டப்பட்டன. இருப்பினும், காஞ்சிபுரம் சேலைகளுக்கான பட்டுத்துணிகள் முதலில் சாயம் ஏற்றப்பட்டு அதன் பின்னர்தான் தறியில் நெய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள ஆரெம்கேவி மையத்தில் நடத்திய பத்தாண்டு கால ஆராய்ச்சிக்குப் பின்னர் நாங்கள் டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ் சேலைகள் மஞ்சிஸ்தா (இந்தியன் மேடர்) ஆகியவற்றிலிருந்து தருவிக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் அம்பர் நிறச்சாயல்களைக் கொண்டுள்ளன, அரக்கு (லேக்) மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நிறமியானது நீல நிறச்சாயல்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயம் (ஃபெனுக்ரீக்), என்ற நெல்லிக்கனி வகைகள், சிகப்பு மண், மாதுளைப் பழ தோல்கள், மல்பெர்ரி என்ற முசுக்கொட்டை இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருட்களில் சிலவாகும். மைரோபலன் சாயங்களை எங்கள் மையத்தில் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இவ்வகையில் இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்கள் இடப்பட்டு, பின்னர் எங்கள் தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்யப்படுகின்றன.

கடந்த பத்தாண்டு காலத்தில் இப்போது முதன்முறையாக வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயமிடப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலை ஒன்றை வாங்கி தங்கள் கலெக்ஷனில் சேர்த்துக் கொண்டு இனிவரவிருக்கும் விழாக்காலத்தை சிறப்பாக கொண்டாட முடியும்.

நாற்பதுக்கும் மேற்பட்ட இயற்கை சாய வர்ணங்கள் இதில் பயன்படுத்தப் படுகின்றன.

ஆரெம்கேவி லினோ சேலைகள்

ஆரெம்கேவி லினோ சேலைகள் என்பது லினோ தொழில்நுட்பம் மூலம் 40% எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளாகும். பட்டுத்துணி நெசவில் லினோ தொழில் நுட்பத்திற்கான காப்புரிமையை ஆர்எம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டுநூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் இந்த அசல் பட்டுச்சேலைகள் ‘காற்றுக்கு ஒப்பான இலேசான’ வடிவமைப்புடன் இருக்கும் வகையில் கைகளால் நெய்யப்பட்ட அற்புதமான படைப்பாகும்.

அதாவது, இந்த இலேசான எடை கொண்ட பட்டுச்சேலைகள் இயல்பாக ‘சுவாசிக்கும் வகையில்’ அதாவது காற்றோட்டத்துடன் கூடியதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளதை இது குறிக்கிறது. 

ஆரெம்கேவி லினோ சேலைகள் தற்கால சந்ததி இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலேசான எடை கொண்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரமிப்பூட்டும் வடிவமைப்புகளில் வழங்கப்படுகின்றன.

எங்கள் பிரத்தியேகமான புதுமைப் படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப்புடவைகளும் தமிழ்நாட்டிலுள்ள ஆரெம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. பட்டானது எங்கள் கைவினைஞர்களால் செயலாக்கம் செய்யப்பட்டு லினோ சேலைகளுக்கான மிக நேர்த்தியான பட்டுநூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பின்னர் பட்டுநூல் இழைகள் எங்கள் தேர்ந்த நெசவாளர்களால் காப்புரிமை பெற்ற நெசவு முறையின் மூலம் கைகளால் நெய்யப்படுகிறது. இதனால், இந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் குறிப்பாக காற்றோட்டம் உடையதாக இருக்கின்றன.

விழாக்காலத்திற்கான ஆரெம்கேவி லினோ பட்டுச்சேலைகள் இதுபோன்ற நெசவுமுறை மூலம் உருவாக்கப்படுவதால் எளிமை மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றின் சங்கமத்துடன் எந்த கொண்டாட்டத்திற்கும் சிறப்பினை கூட்டும் வகையில் இவை அமைந்துள்ளன.

ஆரெம்கேவி பற்றி

1924ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரெம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் அதன் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றுக்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துவமாக ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ இதுநாள் வரை பல தனித்துவமான பட்டுச் சேலைகளை உருவாக்கியுள்ளது. இதில் சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வரிய பூக்கள் மற்றும் குறள் ஓவியம் போன்ற கருத்தாக்க அடிப்படையிலான சேலை ரகங்களும் கிராண்ட் ரிவர்சிபிள் சேலை, 50000 கலர் சேலை, வர்ணஜாலம் ரகங்கள், புதுமையான நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லினோ லைட்-சில்க் என்ற இலேசான எடைகொண்ட பிரத்தியேக பட்டுச்சேலை ரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தன. இன்று நீங்கள் உங்களுக்கென்றே பிரத்தியேகமாக எங்கள் ஆரெம்கேவி நெசவாளர்களின் குழுவைக் கொண்டு 50000க்கும் மேற்பட்ட வண்ணங்களைக் கொண்ட சேலையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

ஆரெம்கேவி தன்னகத்தே பல ரகங்களிலான ஃபேன்ஸி சேலைகள், எம்பிராய்டரி சேலைகள், சல்வார் கமீஸ், மேலும், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ் என்பது ஆரெம்கேவியின் சமீபத்திய புதுமைப் படைப்பாகும். இந்த படைப்பு நமது பாரம்பரிய, மதிப்பு வாய்ந்த சாயமிடும் வழிமுறைகளிலிருந்து மிகவும் ஆடம்பரமான, நீடித்து இருக்கக்கூடிய டிசைன்களை உருவாக்கி அளிக்கிறது.