July 11, 2025
  • July 11, 2025
Breaking News
  • Home
  • பல்சுவை
  • FPL MG அம்பத்தூர் சென்னையில் MG வின்ட்சர் PRO-வை அறிமுகப்படுத்தியது..!
May 12, 2025

FPL MG அம்பத்தூர் சென்னையில் MG வின்ட்சர் PRO-வை அறிமுகப்படுத்தியது..!

By 0 55 Views

JSW எம்ஜி மோட்டார் இந்தியா, ரூ. 13,09,999 லட்சம் + ரூ. 4.5/கிமீ என்ற BaaS விலையில் விண்ட்சர் புரோ-ஐ அறிமுகப்படுத்துகிறது..!

மே 11, 2025: JSW எம்ஜி மோட்டார் இந்தியா, இன்று, புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய எம்ஜி விண்ட்சர் புரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய 52.9 கிலோவாட் மணிநேர பேட்டரி தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது வணிக வகுப்பு (Business class) பயண அனுபவத்தை மேம்படுத்தும்.

எம்ஜி விண்ட்சர் அறிமுகமான நாள் முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் PRO தொடரின் சேர்க்கை அதன் சந்தை செயல்திறனை மேலும் வலுப்படுத்தும். கவர்ச்சிகரமான அறிமுக BaaS விலையான ரூ. 13,09,999 லட்சம் + ரூ. 4.5/கிமீ மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 17,49,800 (முதல் 8,000 முன்பதிவுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும்) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்ஜி Windsor PRO, மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை துரிதப்படுத்தும் என உறுதியளிக்கிறது.

வ.எண் மாதிரி BaaS விலை எக்ஸ்-ஷோரூம் விலை

1 எம்ஜி Windsor Essence PRO ரூ. 13,09,999 லட்சம் + ரூ. 4.5/கிமீ ரூ. 18,09,800

JSW எம்ஜி மோட்டார் தனது ‘ஒரு சேவையாக பேட்டரி (Battery-As-A-Service – BaaS) திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவில் பெரும்பாலானோர் பேட்டரி வாகன உரிமையாளர்களாக மாறுவதை விரிவுபடுத்தும் ஒரு புதிய திட்டமாக அறிமுகப்படுத்தி எலக்ட்ரிக் கார் வாங்குவதற்கு எளிய முறையில் நிதி வழங்க ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் கோடக் மஹிந்திரா பிரைம் போன்ற புதிய நிதி நிறுவனங்களை இணைத்துள்ளது. இந்த உரிமையாளர் ஆகும் திட்டம் இந்திய கார் வாங்குபவர்களுக்கு மின்சார வாகனத்தை உரிமையாக்கிக்கொள்வதை எளிதானதாக மாற்றியுள்ளது.

இந்த புதுமையான உரிமை திட்டம் முதன்முதலில் செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இன்று பஜாஜ் ஃபின்செர்வ், ஹெரோஃபின் கார்ப், எக்கோஃபி, வித்யூத்டெக், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் கோடக் மஹிந்திரா பிரைம் உள்ளிட்ட ஆறு நிதி நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது. எம்ஜி விண்ட்சர் புரோவின் முதல் உரிமையாளருக்கு நிறுவனம் வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்தை வழங்கும்.

மேலும், JSW எம்ஜி மோட்டார் இந்தியா, எம்ஜி Windsor PRO-க்கு 3-60 உறுதியான திரும்ப வாங்கும் திட்டத்தை (Buy back) வழங்கும், இது 3 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் மதிப்பில் 60% தக்கவைக்கப்படும் என்பதை உறுதிசெய்கிறது.

எம்ஜி Windsor PRO அறிமுகம் குறித்து, JSW எம்ஜி மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், அனுராக் மெஹ்ரோத்ரா பேசுகையில், “எம்ஜி விண்ட்சர் இந்தியாவின் 4W-EV பிரிவின் வளர்ச்சியை முன்னேற்றுவதில்) முக்கிய பங்கு வகித்துள்ளது, அதன் கவர்ச்சிகரமான மதிப்பு முன்மொழிவுகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. ஆரம்ப காலத்தில் விண்ட்சரின் வாடிக்கையாளர்கள் தெரிவித்த நல்ல கருத்துக்களும் பரிந்துரைகளும் மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை உருவாக்கியது,

பெருநகரங்களுக்கு அப்பால் டயர் II மற்றும் III சந்தைகளுக்கும் அதனை பற்றிய நல்ல செய்தியை பரவ செய்தது. பாரம்பரியத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் புதிதாக கார் வாங்குபவர்களுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளோம். எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து, சரியான நேரத்தில் சரியான தொழில்நுட்பத்துடன் புதுமைகளை வழங்குவதன் மூலம் இந்திய வாகனத் துறையை மறுவரையறை செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம்.

எம்ஜி விண்ட்சர் புரோவின் அறிமுகம், விரிவான தேர்வுகளை வழங்குவதற்கும், பொதுவாக மின்சார வாகனங்களில் அதிக நம்பிக்கையை ஊட்டுவதற்கும், மேலும் பல வாடிக்கையாளர்களை எதிர்காலத்தை நோக்கி தைரியமாக முன்னேற அழைப்பதற்குமான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.” என்று கூறினார்.