May 2, 2024
  • May 2, 2024
Breaking News
September 11, 2022

நாட் ரீச்சபிள் திரைப்பட விமர்சனம்

By 0 262 Views

கோவையில் நடக்கும் கதை. அங்கு அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டும், இன்னோரு பெண் காணாமலும் போகிறார்.

பெண்களைக் கொலை செய்தது யார்? காணாமல் போன பெண் என்ன ஆனார் என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம்.

காவல்துறையில் இந்தக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக சுபா வர, இன்னொரு அதிகாரி விஷ்வாவையும் அதற்குள் கொண்டு வருகிறார் போலீஸ் கமிஷனர். இதில் சுபாவுக்கு கடும் கோபம் ஏற்படுவது ஏன் என்பதற்குப் படத்தில் ஒரு காரணம் இருக்கிறது.

விஷ்வா வின் அணுகுமுறை நிதானமாகவும், ஆழமாகவும் இருக்கிறது. அதைச் சரியாக செய்திருக்கும் அவர், உடல் மொழியை முன்னணி நடிகர்களிடம் இருந்து கற்க வேண்டும்.

சுபாவின் அணுகுமுறை கோபமாக இருக்கிறது. இரண்டு அதிகாரிகள் ஒரே வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் என்ன விதமான பிரச்சனைகள் வரும் என்பதையும் திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மனநிலை சரியில்லாத சாய் தன்யாவை  ஆரம்பத்திலிருந்து காட்டி வருவது ஆரம்பத்தில் புதிராக இருந்தாலும கடைசியில் அதற்கான விடை இருப்பதu ஆறுதல்.

இன்னொரு முக்கிய வேடத்தில் வரும் ஹரிதாஸ்ரீயும் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்களுடன் காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரங்களுக்கு நடிப்பில் நியாயம் சேர்க்கிறார்கள்.

இலக்கியா மற்றும் சாய்ரோகிணி ஏற்றிருக்கும் வேடங்கள் மூலம் இளம்பெண்களுக்குப் பாடம் கற்பிக்கிறார்கள்.

சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவும், சரண்குமார் இசையும் தேவையான அளவில் இடம் பெற்றிருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷன் என்றாலே காமெடி போலீஸ் வந்தாக வேண்டும் என்று காமெடியாக ஒரு ஏட்டு, கான்ஸ்டபிள் வந்து என்னென்னவோ செய்து நம்மை சிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

படத்தை செய்து எழுதி இயக்கியிருப்பதுடன் படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம். காதல், கொலை, விசாரணை என்ற திரைக்கதையில் ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பார்ப்புடன் கொடுத்திருந்தாலும் ஒருவித நாடகத் தனம் இருப்பதைக் குறைத்திருக்கலாம் அவர்.

இருந்தாலும் ஒரு விசாரணைக் கதையை குழப்பம் இல்லாமல் சொல்லி இருப்பதைப் பாராட்டலாம்.

கதையில்லாமல் வரும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையுடன் வந்திருக்கும்நாட் ரீச்சபிள் – நல்ல முயற்சி.!