April 20, 2024
  • April 20, 2024
Breaking News
September 14, 2022

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் – அப்போலோ மருத்துவமனையின் நவீன இடையீட்டு சிகிச்சை

By 0 388 Views

அப்போலோ மருத்துவமனை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் (Atrial Fibrillation) பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளைக் காப்பாற்ற புதிய இடையீட்டு சிகிச்சை நடைமுறைகளை (novel interventional procedures) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது!

சென்னை, 14 செப்டம்பர் 2022: சென்னை அப்போலோ மருத்துவமனை க்ரையோ பலூன் அப்லேஷன் (“Cryo Balloon Ablation”) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து சிகிச்சை மேற்கொள்கிறது. இந்த நடைமுறை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் சிக்கலான மற்றும் பொதுவான இதயத் துடிப்புக் கோளாறுக்கு தீர்வை வழங்குகிறது. சென்னையில் 64 வயது பெண்மணிக்கு முதல் க்ரையோ பலூன் அப்லேஷன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. க்ரையோ பலூன் அப்லேஷனைத் தொடர்ந்து 52 வயதான பெண் நோயாளிக்கு இந்தியாவில் முதன்முறையாக இடது ஏட்ரியல் அபெண்டேஜ் க்ளோஷர் (LAAC Appendage Closure) சாதனத்தையும் அப்போலோ மருத்துவமனை பொருத்தியுள்ளது.

அப்போலோ மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் [Interventional Cardiologist & Electrophysiologist). நன் நோயாளிகளுக்கு புதிய க்ரையோ பலூன் அப்லேஷன் தொழில்நுட்பத்தைப் (novel Cryo Balloon Ablation technology,) பயன்படுத்தி, குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை நடைமுறைகளைச் செய்தனர். மேலும் ஒரு நோயாளிக்கு, இடது ஆர்ஷியல் அப்பெண்டேஜ் க்ளோஷர் சாதனமும் (Left Arial Appendage Closure device) பொருத்தப்பட்டது.

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன், ஏஎஃப் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒழுங்கற்ற இதயத் துடிப்புக் குறைபாடு ஆகும். இது இதயத்தின் மேல் அறைகளை (upper chambers – ஏட்ரியா) பாதிக்கிறது. ஏஎஃப் குறைபாட்டில், ஏட்ரியம் சாதாரணமாக துடிப்பதற்குப் பதிலாக நடுங்குவது போல அமைகிறது. ஏஎஃப் விரைவான இதயத் துடிப்பிற்கு வழிவகுக்கும். இந்த குறைபாடு ஏற்படும்போது இதயமானது ஏட்ரியாவில் நிமிடத்திற்கு 300 முறை அல்லது அதற்கும் அதிகமாகவும், கீழ் அறைகளில் (lower chambers -வென்ட்ரிக்கிள்ஸ்) நிமிடத்திற்கு 150 முறை அல்லது அதற்கும் அதிகமாகவும் துடிக்க்க கூடும். ஏஎஃப் உடையவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஐந்து மடங்கு அதிகம். அத்துடன் சாதாரண இதய துடிப்புடன் இருப்பவர்களை விட இரண்டு மடங்கு இதய செயலிழப்பு ஆபத்தும் இவர்களுக்கு உள்ளது.

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AF) என்பது 90 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களை பாதித்துள்ள பொதுவான இதயத் துடிப்புக் கோளாறு ஆகும். இது பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஏஎஃப்பில், மின் தூண்டுதல்கள் (இதயத் துடிப்புக்கு ஆணையிடுவதே தூண்டுதல்கள்) வேகமான மற்றும் குழப்பமானவையாக உள்ளன. இது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளுக்கு வழிவகுப்பதோடு ரத்தத்தை செலுத்தும் (பம்ப் செய்யும்) செயல்திறனைக் குறைக்கிறது.

க்ரையோ பலூன் அப்லேஷன் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை விளக்கி, சென்னை அப்போலோ பிரதான மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணர் மற்றும் மின் இயற்பியல் நிபுணர் டாக்டர் ஏ.எம்.கார்த்திகேசன் (Dr AM Karthigesan, a Senior Consultant Cardiologist & Electrophysiologist at the Apollo Main Hospitals) கூறுகையில், “ஏஎஃப்-க்கான க்ரையோ பலூன் அப்லேஷன் சிகிச்சை என்பது நுரையீரல் நரம்புகளிலிருந்து ஏட்ரியா வரை செல்லும் அசாதாரண மின் சமிக்ஞைகளால் ஏற்படும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு புதிய இடையீட்டு செயல்முறையாகும். நுரையீரல் நரம்புகளைச் சுற்றி வடு திசுக்களின் வட்டத்தை உருவாக்குவதன் மூலம் திசுக்களில் இருந்து வெப்பத்தை அகற்றவும் கேவையற்ற மின் சமிக்ஞைகளை முடக்கவும் குளிர் ஆற்றலைப் பயன்படுத்த ஊதப்பட்ட பலூன் இதுவாகும். இடது ஏட்ரியத்துக்குச் (மேல் அறை) செல்வதற்கு கேதடெரைச் (catheter) செருக இடுப்புப் பகுதியில் ஒரு சிறிய கீறல் இடப்படுகிறது. பலூன் ஊதப்பட்டு, நுரையீரல் நரம்பு திறக்கும் வரை நகர்த்தப்பட்டு, திறப்பை தற்காலிகமாக அடைப்பதன் மூலம், பலூன் போதுமான குளிர் வெப்பநிலையை அடையும். கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் பின்னர் குளிர் ஆற்றலை (நைட்ரஸ் ஆக்சைடு) பலூனில் செலுத்துகிறார். பலூன், நுரையீரல் நரம்பின் திறப்பைத் தொடும் இடத்தில் குளிர் ஆற்றல் திசுவை உறைய வைக்கிறது. இது திசுக்களில் வடுக்கள் ஏற்படுத்துகிறது. ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனை ஏற்படுத்தும் மின் சமிக்ஞைகளின் பரிமாற்றத்தை நிறுத்துகிறது. க்ரையோ பலூன் மூலம் தொடக்கத்திலேயே மேற்கொள்ளப்படும் அப்லேஷன் சிகிச்சையானது சிறந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் ஏஎஃப் நோயாளிகளுக்கு இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “மறுபுறம், இடது ஏட்ரியல் இணைப்பு மூடல் (LAAC – left atrial appendage closure device) சாதனம் இதயத்தின் இடது ஏட்ரியல் இணைப்பு (LAA- left atrial appendage) எனப்படும் ஒரு பகுதியை மூடுகிறது. எல்ஏஏ-வில் உருவாகக்கூடிய தீங்கு விளைவிக்கும் ரத்த உறைவுக் கட்டிகள் ரத்த ஓட்டத்தில் நுழைவதை இது தடுக்கிறது.

ஏஎஃப்-பில் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கிறது. எல்ஏஏ-வை மூடுவதன் மூலம், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து குறைக்கப்படுகிறது. மேலும் காலப்போக்கில், நோயாளிகள் ரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வாய்ப்பு ஏற்படும். இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பமானது, சிறந்த மற்றும் நீண்ட கால விளைவுகளை உறுதி செய்கிறது. இது அதிக நோயாளிகளுக்கு பாதுகாப்பாகவும் திறம்படவும் சிகிச்சை அளிக்க உதவும் புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு நிரந்தர சாதனம். இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதுடன் உடலுக்கு வெளியே இது தெரியாது. பக்கவாதம் ஏற்படும் ஆபத்தில் இருக்கும் ஏஎஃப் குறைபாடு உடைய நோயாளிகளுக்கு, குறிப்பாக ரத்தத்தை இலகுவாக்கக் கூடாது என்ற கட்டாயக் காரணத்தைக் கொண்டவர்களுக்கு இவை புதிய மாற்று வழிகளாக அமைந்துள்ளன. இந்த இரண்டு சிகிச்சை நடைமுறைகளும் பொது மயக்க மருந்துகளைச் செலுத்திச் செய்யப்படுகின்றன. இவற்றை மேற்கொள்ள சுமார் ஒரு மணி நேரம் ஆகும். நோயாளிகள் பொதுவாக ஒரே இரவு மட்டும் மருத்துவமனையில் தங்கி மறுநாள் வீடு திரும்ப முடியும்.” என்றார்.

மாநாட்டில் பேசிய அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் சுனீதா ரெட்டி, (Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group), “பல ஆண்டுகளாக, அப்போலோ மருத்துவமனைக் குழுமம் மக்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய உயிர்காக்கும் சேவைகள் மற்றும் நடைமுறைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய நடைமுறை அப்போலோ மருத்துவமனை கொண்டிருக்கும் அந்த உறுதிப்பாட்டின் மற்றொரு பகுதியாகும்.” என்றார்.

 

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் பற்றி..:

சென்னையில் 1983-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்போலோ குழுமம் திகழ்கிறது. தற்போது 72 மருத்துவமனைகளில் 12000க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 4100 மருந்தகங்கள், 120 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 650 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 700 க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ முன்னணி வகிக்கிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.

சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது.

இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ முன்னணி வகிக்கிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.