April 23, 2024
  • April 23, 2024
Breaking News
October 1, 2022

சர்வதேச முதியோர் தினம் 2022 – ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய நிகழ்வு

By 0 396 Views

ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக (இன்டர்நேஷனல் டே ஆஃ ப் ஓல்டர் பெர்சன்ஸ் IDOP) அறிவித்துள்ளது.

இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஹெல்ப் ஏஜ் இந்தியா, அக்டோபர் 1, 2022 அன்று (சனிக்கிழமை) சென்னை சேத்துப்பட்டில் உள்ள குச்சலாம்பாள் கல்யாண மஹாலில் காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை, நாள் முழுவதும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு தொடக்க நிகழ்ச்சியுடன் தொடங்கும். 

தமிழ்நாடு, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, இயக்குனர் திருமதி டி.ரத்னா, ஐ.ஏ.எஸ்., தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கொண்டாட்டங்களை துவக்கி வைக்கிறார். அவர் ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் கோல்டன் விருது – 2022 ஐ முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ வி.எஸ்.நடராஜன் க்கு வழங்குவார். சென்னை இந்திய அரசு ரயில்வே அமைச்சகத்தின் முதன்மை நிதி ஆலோசகர், திருமதி உஷா வேணுகோபால், ஐ.ஆர்.ஏ.எஸ் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு, சுகாதார சுவரொட்டியை வெளியிடுகிறார். சென்னை, டிவிஎஸ் எஸ்சிஎஸ் குளோபல் ஃபிரைட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் இன் தலைவர்- HR , திருமதி ரஜினி ஸ்ரீராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த குடிமக்கள் சங்கங்களுக்கு உதவுகிறார். சென்னை, எஸ்பிஓஏ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி இன் தாளாளர், டாக்டர் நித்திஷ் ஆந்த்ரேயா ராஜா சிங் சிறப்பு விருந்தினராகவும், மற்றும் 80 முதல் 89 வயதுடைய பெரியவர்களை வாழ்த்துவர்.

காலை 11.00 மணிக்கு தாடிகொண்டா வத்சலா ராமச்சந்திரா (டிவிஆர்) அறக்கட்டளை உறுப்பினர்களால் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து முதியவர்களுக்கான பல்வேறு போட்டிகள், அதாவது குரூப் டான்ஸ், ஃபேன்ஸி டிரெஸ், சூப்பர் தாத்தா மற்றும் சூப்பர் பாட்டி போன்றவற்றுக்கான போட்டிகள் நடைபெறும்.

இந்த நிகழ்வுகளுக்கு, பல்வேறு பின்னணியைச் சேர்ந்த பிரபலங்கள் நடுவர்களாக இருப்பார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அதே இடத்தில் மதியம் 02.45 மணி முதல் 03.30 மணி வரை பிரிவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் செயலாளர்/மாவட்ட நீதிபதி திரு ஏ. நசீர் அகமது தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கிங் தாத்தா மற்றும் குயின் பாட்டி 2018 கிரீடம் அணிவிக்கிறார்.

சென்னை அதுல்யா அசிஸ்டெட் லிவிங் பிரைவேட் லிமிடெட் இன் நிர்வாக இயக்குனர் டாக்டர் கார்த்திக் நாராயண்.ஆர் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு, ஸ்பான்சர்களை கெளரவிப்பதுடன், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவார்.

ஹெல்பேஜ் இந்தியா பற்றி…

ஹெல்ப் ஏஜ் இந்தியா ஒரு முன்னணி மனிதாபிமான, மேம்படுத்துதல் மற்றும் முனைப்பியக்க அமைப்பாக, 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள முதியவர்களுடன் பணிபுரிகிறது. இது 1860 ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது அவர்களின் முகாந்திரத்திற்காகவும், ஆதவுகளுக்காகவும் வலுவாக வாதிடுகிறது மற்றும் பின்தங்கிய முதியவர்களின் வாழ்க்கையில் நீடித்த முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் வயது பராமரிப்பு திட்டங்களையும் நடத்துகிறது. முதியோர்களின் திறன் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் மறுக்க முடியாத பங்களிப்பை இது உறுதியாக நம்புகிறது. இது முதியோர் தொடர்பான கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை மற்றும் செயல்படுத்தலை வழங்குகிறது.

“முதியோர்களின் முகாந்தரங்களுக்காகவும் பராமரிப்பிற்காகவும் நாடு முழுவதும் பணியாற்றுதல்” 

சமூகங்களின் பதிவுச் சட்டம் XXI (1860) இன் கீழ் மதச்சார்பற்ற சமூக சேவை சங்கம் எண். S/9270 எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹெல்ப் ஏஜ் இந்தியாவுக்கான நன்கொடைகளுக்கு I.T இன் பிரிவு 35AC & 80GGA இன் கீழ் 100% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. (சட்டம், 1961)

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:

வி.சிவகுமார்

மாநில தலைவர் – தமிழ்நாடு

ஹெல்ப் ஏஜ் இந்தியா

3C – தியாகராஜா வளாகம்

853, பூந்தமல்லி உயர் சாலை,

கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010

தொலைபேசி: (044) 25322149 மேலும்

மொபைல்: 8220044050

மின்னஞ்சல்: chennai@helpageindia.org