October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் ரஜினி கமல் வேண்டவே வேண்டாமாம்

by on January 4, 2020 0

இந்தியாவில் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இடம் பிடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளைப் பெற்றவர் திவ்யா. உலக புகழ் பெற்ற மதிய உணவு திட்டமான ‘அக்ஷய பாத்ரா’வின் விளம்பர தூதுவராகவும் அவர் இருக்கிறார். திவ்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய எனது நோக்கம் ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கியம் மீதுதான் இருக்கிறது என்றார்.  தற்போது தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ‘சி’ […]

Read More

இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் திவ்யங்காவை மணந்தார் – கேலரியுடன்

by on July 14, 2019 0

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ரன்பீர் கபூர் – பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ‘அஞ்சனா அஞ்சனி’ என்ற இந்தி படத்தில் இயக்குநர் ‘சித்தார்த் ஆனந்த்’திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின் தமிழில் ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ மற்றும் ‘7ஆம் அறிவு’ படத்திலும் இணை இயக்குநராகப் பணியாற்றினார். 2014ல் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘ அரிமா நம்பி’ எனும் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அந்தப்பட வெற்றியைத் […]

Read More

கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி – சிவகார்த்திகேயன் அறிவிப்பு

by on January 8, 2019 0

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’, கடும் போட்டிக்கு இடையே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்… தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து… “நடிகன் என்பதுதான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் […]

Read More

கனா படத்தின் திரை விமர்சனம்

by on December 19, 2018 0

விளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும். அப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’ […]

Read More

செலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்

by on December 15, 2018 0

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதிலிருந்து… “ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் […]

Read More

37 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வை – கனா டிரைலர் சாதனை

by on November 27, 2018 0

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் ‘கனா’ படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு. ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி..!” என்றார். அவர் மேலும் கூறும்போது, “பெண்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமையுடன் தடைகளை […]

Read More

நோட்டா வுக்காக மரண வெயிட்டிங் – விஜய் தேவரகொண்டா

by on September 28, 2018 0

ஆந்திரப் படவுலகமும், ஆந்திர திரைப்பட ரசிகர்களும் இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா போகும்வழியில் மண்ணெடுத்து பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்கின்றன ஆந்திர மீடியாக்கள். அப்படிப்பட்ட அவரை நேருக்கு நேர் அருகாமையில் நேற்று சென்னையில் நடந்த ‘நோட்டா’ பத்திரிகையாளர் சந்திப்பில் காண முடிந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘நோட்டா.’ விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக […]

Read More

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

by on August 24, 2018 0

உலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால் […]

Read More