February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 37 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வை – கனா டிரைலர் சாதனை
November 27, 2018

37 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வை – கனா டிரைலர் சாதனை

By 0 1069 Views

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் ‘கனா’ படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு. ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி..!” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “பெண்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமையுடன் தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் சாதிப்பது உற்சாகமான விஷயம். இது என் எண்ணம் மற்றும் நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சமீபத்திய ஐ.சி.சி. டி 20 உலகக் கோப்பையில் இதைக் கண்டிருக்கிறது..!

“இது வெறுமனே பெண்களின் கனவுகளையும் சாதனைகளையும் சொல்வதைத் தாண்டி, அவர்களுக்குப் பின்னால் நின்று சாதிக்க துணையாக நிற்பவர்களைப் பற்றி சொல்லும் படமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ‘கனா’வில் தந்தை மற்றும் மகள் இடையே உள்ள பிணைப்பு, முழு படத்தையும் எமோஷனால் சொல்லப்பட்டிருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் மிக நிறைவாக செய்திருக்கிறார். சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட அத்தியாயங்கள் நிஜ வாழ்க்கையில் நம்மை பிரதிபலிப்பதோடு, ஊக்கமளிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்..!” என்றார்.

கனா படத்தின் இசை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.