January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் திவ்யங்காவை மணந்தார் – கேலரியுடன்
July 14, 2019

இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் திவ்யங்காவை மணந்தார் – கேலரியுடன்

By 0 1624 Views

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ரன்பீர் கபூர் – பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ‘அஞ்சனா அஞ்சனி’ என்ற இந்தி படத்தில் இயக்குநர் ‘சித்தார்த் ஆனந்த்’திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின் தமிழில் ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ மற்றும் ‘7ஆம் அறிவு’ படத்திலும் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.

2014ல் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘ அரிமா நம்பி’ எனும் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் ‘இருமுகன்’ படத்தை இயக்கினார் .விக்ரம் நயன்தாரா இணைந்து நடித்த முதல் படம் இது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியதுடன் மக்களின் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

பின்னர், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் சென்சேஷ்னல் ஹீரோவான விஜய் தேவர்கொண்டாவை வைத்து தமிழில் அரசியல் கதைகளத்தின் பின்னனியில் இவர் எடுத்த படம் ‘நோட்டா ‘.விஜய் தேவர்கொண்டா தமிழில் அறிமுகமாகிய முதல் படம் இது.

இத்தனை பெருமைகளுடன் 11 .7 .2019 அன்று ‘திவ்யங்கா’வைக் கரம் பிடித்து இல்வாழ்வில் இறங்கினார் ஆனந்த் ஷங்கர். இந்தத் திருமணம் சென்னை ஐ.சி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் ,உறவினர்கள் மற்றும் விக்ரம், சத்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, தம்பி ராமையா உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கேலரி கீழே…

(1)

Picture 1 of 6