March 1, 2024
  • March 1, 2024
Breaking News

Tag Archives

பல பாகங்களைக் கொண்ட படைப்பின் தொடக்கம்தான் துருவ நட்சத்திரம் – கௌதம் மேனன்

by on November 21, 2023 0

ஒரு நடிகராக வெற்றி அடைந்தாலும் தன் முத்திரையான இயக்கத்தை கைவிடாதவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த இப்போது வெளியாக இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்.’ பல்வேறு தடைகளைக் கடந்து இந்த படம் வெளியாக இருக்கும் தருணத்தில் இதைப் பற்றி பேசினார் கௌதம் மேனன். சமீபத்தில் வெளியான துருவ நட்சத்திரம் டிரைலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதோடு, அதில் இடம் பெற்ற கிரிக்கெட் தொடர்பான வசனங்கள் வைரலாகி வருகிறது. எனவே, கிரிக்கெட் தொடர்பான விசயங்கள் […]

Read More

நம் வரலாற்று நிகழ்வை… வாழ்க்கையைச் சொல்லும் படம் தங்கலான் – சீயான் விக்ரம்

by on November 2, 2023 0

‘தங்கலான்’ டீசர் வெளியீட்டு விழா ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் […]

Read More

தங்கலான் – முதல் முன் விமர்சனம்

by on October 31, 2023 0

‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன். ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும், இது இன்ன விளைவை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிப்பது சிறந்த விமர்சகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அதைவிடச் சிறந்த திறன், படத்தின் டீசரையோ ட்ரைலரையோ பார்த்து அந்தப் படம் என்ன விளைவை […]

Read More

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

by on October 28, 2023 0

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் […]

Read More

கோப்ரா திரைப்பட விமர்சனம்

by on August 31, 2022 0

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும்.  இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை சொல்லி இருப்பார் போலிருக்கிறது. விக்ரமுக்கு அவ்வளவு நடிப்பு பசி. ஆனால் தசாவதாரம் போல ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு காரணம், ஒரு கதை […]

Read More

ரசிகர்கள் காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது – கோப்ரா விழாவில் விக்ரம்

by on August 26, 2022 0

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ […]

Read More

இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் விக்ரம் ஜூலை 8 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டரில்

by on June 29, 2022 0

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான “விக்ரம்” படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது. […]

Read More

விக்ரம் திரைப்பட விமர்சனம்

by on June 3, 2022 0

கமல் படம், ரஜினி படம் என்றால் கமல் மற்றும் ரஜினிதான் முதலில் நினைவுக்கு வருவார்கள். அதை யார் இயக்குகிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.  ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாகத்தான் தோன்றுகிறது. அதில் கமல் நடித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் கமல் படத்தின் குறியீடுகள் குறைந்தும் லோகேஷ் கனகராஜ் படங்களின் குறியீடுகள் அதிகரித்தும் இருப்பதுதான். அதென்ன லோகேஷ் கனகராஜ் பட குறியீடுகள் என்கிறீர்களா..? பிரியாணி, ஜெயில், கொசு மருந்து […]

Read More

விக்ரம் இசை வெளியீட்டின் பாதியிலேயே உதயநிதி கிளம்பியது ஏன்? – கமல் விளக்கம்

by on May 16, 2022 0

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து  கமல் கதாநாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கி இருக்க, உதயநிதி விழாவில் கலந்து கொண்டார். ரஜினி, சூர்யா உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சிம்பு பேசியது, “கமல் 50 நடந்த போது நான் மேடையில் […]

Read More