November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் மோடிக்குக் கடிதம்

by on May 7, 2021 0

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமானதாகும். தொடர்ந்து தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார்.    பதவி ஏற்றதும் அவரது தந்தை கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். […]

Read More

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உதயநிதி போட்டியிடும் தொகுதிகள்

by on March 12, 2021 0

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு… கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன் துறைமுகம்-சேகர் பாபு தி.நகர்-ஜெ.கருணாநிதி ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன் ஆவடி-நாசர் மாதவரம்-சுதர்சனம் மைலாப்பூர்-த.வேலு ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன் ஒரத்தநாடு-ராமச்சந்திரன் தஞ்சை-நீலமேகம் திருச்சி மேற்கு-கே.என்.நேரு காட்பாடி- துரைமுருகன் காஞ்சிபுரம்-எழிலரசன் உத்திரமேரூர்-சுந்தர் செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் செஞ்சி -மஸ்தான் விக்கிரவாண்டி-புகழேந்தி திருக்கோவிலூர்- பொன்முடி திருவண்ணாமலை-எ.வ.வேலு எடப்பாடி- சம்பத்குமார் பாலக்கோடு-பி.கே.முருகன் […]

Read More

உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்

by on April 12, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். […]

Read More

சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

by on March 16, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.    தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.   சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை […]

Read More

வாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்

by on November 3, 2019 0

புதுக்கோட்டை, விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… 1967-ல் அண்ணா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்ட முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது. சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், […]

Read More

திமுக தகுதி நீக்கம் செய்வதைவிட நானே விலகுகிறேன் – ராதாரவி

by on March 25, 2019 0

‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து தரக்குறைவாக ராதாரவி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து ராதாரவியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதன் எதிரொலியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நடிகர் […]

Read More

நான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்

by on January 9, 2019 0

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்றைக்கு திருவாரூரில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இன்றைக்கு சந்தித்த கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். […]

Read More

விசிக நடத்தும் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார் – திருமா

by on December 20, 2018 0

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பேசியதிலிருந்து… “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதை விடுதலை சிறுத்தை கட்சி வழி மொழிகிறது. வரவேற்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாதி, மத, மோதல், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் திருச்சியில் தேசம் காப்போம் […]

Read More

ஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்

by on September 22, 2018 0

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். அதிலிருந்து… “சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஊழல் குறித்து […]

Read More