January 15, 2025
  • January 15, 2025
Breaking News
September 22, 2018

ஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்

By 0 1010 Views

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். அதிலிருந்து…

“சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தகுதி இல்லை..!”

ஸ்டெர்லைட் குறித்த ஒரு கேள்விக்கு, “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை…!”