September 14, 2025
  • September 14, 2025

Simple

குண்டடி பட்டவர்கள் சமூக விரோதிகளா… ரஜினி விளக்க வேண்டும் – சீமான்

by on May 31, 2018 0

ரஜினியின் தூத்துக்குடி வருகையை விமர்சித்து நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதிலிருந்து… “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைத் திசைதிருப்பவே அங்கு ரஜினிகாந்த்தை அனுப்பியுள்ளார்கள். அவர் ஆறுதல் கூற வரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு ஆறுதல் கூறவந்த ரஜினிகாந்த் , திறந்த காரில் கைகளை உயர்த்தியபடி ஓட்டு கேட்பது போல் வந்தார். அவர் சமூக விரோதிகள் என்று கூறுவது யாரை? இதற்கு ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும். ஏராளமான மக்கள் […]

Read More

எங்கள் போராட்டத்தை ரஜினி இப்படி விமர்சித்திருக்க வேண்டாம் – சந்தோஷ்ராஜ்

by on May 31, 2018 0

நேற்று ரஜினியின் தூத்துக்குடி வருகையின்போது அங்கு மருத்துவமனையின் சிகிச்சை பெறும் சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் ரஜினியிடம் “நீங்கள் யார்..? எங்கிருந்து வருகிறீர்கள்..?” என்று கேட்ட கேள்வி நேற்று சமூக வலை தளங்களில் வைரலானது. ரஜினியைத் திகைக்க வைத்த அந்தக் கேள்வியைக் கேட்ட சந்தோஷ்ராஜ் பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சென்றபோதுதான் ரஜினிக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. […]

Read More

பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – செங்கோட்டையன்

by on May 30, 2018 0

இன்று சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான செம்மலை பேச்சுக்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதிலிருந்து… “இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த ஆட்சிக்குக் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் பத்து மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதால் மாணவர்களை அதிகமாக சேர்க்க அந்தப் பள்ளகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக […]

Read More

எந்த இடத்திலும் காவலர்கள் மேல் கைவைக்கக் கூடாது – தூத்துக்குடியில் ரஜினி பேட்டி

by on May 30, 2018 0

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது… இங்கே நடந்த கலவரத்தில் வன்முறை செய்தது சமூக விரோதிகளின் செயல். அவர்கள்தான் உள்ளே நுழைந்து போராட்டத்தைத் திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது. இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது. இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு […]

Read More

ஸ்டெர்லைட் மூடியதால் பணி இழந்தோர்க்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் – தமிழிசை

by on May 29, 2018 0

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் இருந்து… “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு முன்பு இதேபோல் முடிவெடுத்தபோது மறுபடியும் நீதிமன்றம் சென்று ஆலை திறக்கப்பட்டது போல் மீண்டும் நடைபெறக் கூடாது. தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் இருந்தார்கள் என்பது வேதனையான விஷயம். ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் பணியிழந்தவ்ர்களுக்கு அரசு […]

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

by on May 29, 2018 0

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 […]

Read More