September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு
May 29, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

By 0 1265 Views

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 கோடி அளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இதே கோரிக்கைகளுடன் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்ய, இம்மனுக்கள் நாளை விசாரணைக்கு வரலாம் என்று தெரிகிறது. இந்நிலையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கும் என்று டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

அத்துடன் தூத்துக்குடிக்கு தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்தவும் உள்ளதாகத் தெரிகிறது.