June 13, 2025
  • June 13, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • ஸ்டெர்லைட் மூடியதால் பணி இழந்தோர்க்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் – தமிழிசை
May 29, 2018

ஸ்டெர்லைட் மூடியதால் பணி இழந்தோர்க்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் – தமிழிசை

By 0 1160 Views

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் இருந்து…

“ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு முன்பு இதேபோல் முடிவெடுத்தபோது மறுபடியும் நீதிமன்றம் சென்று ஆலை திறக்கப்பட்டது போல் மீண்டும் நடைபெறக் கூடாது.

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் இருந்தார்கள் என்பது வேதனையான விஷயம். ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் பணியிழந்தவ்ர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒரு கண்துடைப்பு என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது மூடப் படவேண்டிய அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலையை தி.மு.க. ஆட்சி தான் திறந்தது. இதற்காக ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை அப்போது திறந்ததில் காங்கிரசுக்கு என்ன பங்கு என்று திருநாவுக்கரசர் தெரிவிக்க வேண்டும்..!”