January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • கல்வி
  • பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – செங்கோட்டையன்
May 30, 2018

பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – செங்கோட்டையன்

By 0 1293 Views

இன்று சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான செம்மலை பேச்சுக்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதிலிருந்து…

“இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த ஆட்சிக்குக் கிடையாது.

854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் பத்து மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதால் மாணவர்களை அதிகமாக சேர்க்க அந்தப் பள்ளகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் நலன் கருதி பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது…!”