September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • தக்ஷா சிஸ்டம் மென்பொருளில் டஸ்ஸால்ட் நிறுவனம் சோதனை செய்யும் ட்ரோன்களின் செயல்பாடுகள்!
June 1, 2024

தக்ஷா சிஸ்டம் மென்பொருளில் டஸ்ஸால்ட் நிறுவனம் சோதனை செய்யும் ட்ரோன்களின் செயல்பாடுகள்!

By 0 269 Views
  • தக்ஷா சிஸ்டம் இன் SIMULIA மென்பொருளைக் கொண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின்  செயல்பாடுகளை சோதனை செய்கிறது.
  • மாறுபடும் பயன்பாட்டு தேவைகளுக்கேற்ப புதிய ட்ரோன்களை குறுகிய காலத்தில் சந்தைப்படுத்தவும்புத்தாக்க முயற்சிகளை செயல்படுத்தவும் 3DEXPERIENCE மென்பொருள் தளம் உதவுகிறது.
  • மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பிற ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தனக்கென்று ஒரு தனித்தன்மையை தக்ஷா நிறுவனம் அடைந்திருக்கிறது.

 சென்னை மே 29, 2024 – ஆளில்லா தானியங்கி ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னணி இந்திய கண்டுபிடிப்பாளரான தக்ஷா அன்மேன்ட் சிஸ்டம்ஸ் (தக்ஷா), வடிவமைப்பு மற்றும் மாதிரி சோதனை செயல்பாடுகளுக்கு டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸ்  (Euronext Paris: FR0014003TT8, DSY.PA) இன் 3D EXPERIENCE  மென்பொருளைப் பயன்படுத்தி வெற்றி கண்டதாக அறிவித்தது.

விவசாயம், பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் விநியோக பயன்பாடுகளுக்கான ஒரு விரிவான அளவிலான UAS தீர்வுகளை வடிவமைத்து உருவாக்க, தக்ஷா அதன் SIMULIA மென்பொருள் பயன்பாடுகள் உட்பட 3DEXPERIENCE தளத்தை பயன்படுத்துகிறது.

அதன் பயனுள்ள வடிவமைப்பு பணிப்பாய்வுகள், திருத்தக் கட்டுப்பாடு மற்றும் சமீபத்திய வடிவமைப்பு தரவுகளுக்கான நிகழ்நேர அணுகல் ஆகியவற்றின் மூலம் இந்த இயங்குதளம் புத்தாக்க முயற்சிகளை வளர்க்கிறது. 3DEXPERIENCE இயங்குதளத்தின் மூலம் மாதிரியாக்கம் மற்றும் உருவகப்படுத்துதலின் ஒருங்கிணைந்த திறன்களை தக்ஷா நிறுவனம் பயன்படுத்துகிறது.

மெய்நிகர் சூழலில் ட்ரோன்களை முதலில் வடிவமைத்து சோதனை செய்யும் முறையானது, கணிசமான நேரத்தையும் செலவையும் குறைக்கிறது. வடிவமைப்பு, செயல்திறன் சோதனை, தயாரிப்பு மேம்பாடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க 3DEXPERIENCE மென்பொருள் இயங்குதளமும், SUMULIA மென்பொருளும் உதவுகிறது.

மேலும் தக்ஷா அன்மேன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் நாராயணன் கூறும்பொழுது “டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸ் இன் 3D EXPERIENCE இயங்குதளம் தக்ஷா அன்மேன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திருப்புமுனையாக உள்ளது. இந்த மென்பொருள் தளம், விரைவான வேகத்தில் புதுமையான மற்றும் திறமையான ட்ரோன்களை உருவாக்க உதவியது. மேலும் EDS டெக்னாலஜிஸ் குழு எங்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தார்கள் மற்றும் எளிய அணுகுமுறைகள் மூலமாக இந்த மென்பொருளை சிறப்பாக பயன்படுத்தவும் உதவினார்கள்,”என்று தெரிவித்தார்.

“டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸ் இல் தொழில்துறைகளை மாற்றும் புதுமைகளை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தக்ஷா அன்மேன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உடனான எங்கள் ஒத்துழைப்பு இந்த இலக்கை நிரூபித்துக்காட்டுகிறது.

இந்த 3D EXPERIENCE இயங்குதளத்துடன் அதை வழங்குவதன் மூலம், அடுத்த தலைமுறை ட்ரோன்களை விரைவாகவும் மற்றும் மேலும் திறமையாகவும் உருவாக்க தக்ஷா நிறுவனத்தை நாங்கள் தயார்படுத்துகிறோம். இது இந்திய ட்ரோன் சந்தையில் அவர்களின் நிலையை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், தொழில்துறையை முன்னோக்கி நகர்த்தும், ”என்று டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸ்  இன் இந்தியா நிர்வாக இயக்குனர் தீபக் NG கூறினார்.