July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • கல்வி
  • ரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து
June 14, 2018

ரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து

By 0 1580 Views

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும். இந்நிலையில் மூன்று நாள் விடுமுறையில் சிலர் வெளியூர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி விட, சென்னையைப் பொறுத்தமட்டில் வெளியூர்ப் செல்லும் பயணிகளால் கோயம்பேடு பஸ் நிலையம் வழக்கத்தைவிட நெரிசலானது.