April 26, 2025
  • April 26, 2025
Breaking News
May 31, 2018

குண்டடி பட்டவர்கள் சமூக விரோதிகளா… ரஜினி விளக்க வேண்டும் – சீமான்

By 0 1088 Views

ரஜினியின் தூத்துக்குடி வருகையை விமர்சித்து நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதிலிருந்து…

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைத் திசைதிருப்பவே அங்கு ரஜினிகாந்த்தை அனுப்பியுள்ளார்கள். அவர் ஆறுதல் கூற வரவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு ஆறுதல் கூறவந்த ரஜினிகாந்த் , திறந்த காரில் கைகளை உயர்த்தியபடி ஓட்டு கேட்பது போல் வந்தார். அவர் சமூக விரோதிகள் என்று கூறுவது யாரை? இதற்கு ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏராளமான மக்கள் குண்டடி பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களில் யாரும் சமூக விரோதிகள் என்கிறாரா? பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை மற்றும் தமிழக அமைச்சர்கள் என்ன கூறினார்களோ அதைத்தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார்..!”