January 12, 2025
  • January 12, 2025
Breaking News
June 2, 2018

கர்நாடகாவில் காலா திரையிடக் கூடாதென்பது என்ன நியாயம் – பொன். ராதாகிருஷ்ணன்

By 0 1094 Views

கோவை மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதிலிருந்து…

“கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்குத் தீர்வு தந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கையெழுத்திட்ட நிதின் கட்காரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. அந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் ஆய்வுக்குப் பின்னர் அங்கு தேவையானவற்றை செய்வோம்.

மத்திய அரசு தமிழகத்திற்கு தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எதைக் கொண்டு வந்தாலும் சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தமிழகம் முன்னேற கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றரை கோடி தமிழர்களைக் கொன்று குவித்து ராஜபக்சேவின் கைக்கூலிகள். அவர்களை ஒன்றரைக் கோடி தமிழர்களின் ஆவி சும்மா விடாது.

நான்காண்டு கால பாரதிய ஜனதா ஆட்சி பல்வேறு கோடி நலத் திட்டங்களை செய்துள்ளது. காங்கிரஸ் ஏற்றி வைத்த கடன்கனை அடைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு அரசு முயற்சி செய்து வருகிறது.

கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிட கூடாது என்பது என்ன நியாயம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேசித் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்..!”