September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • Pon Radhakrishnan

Tag Archives

தெலங்கானா கவர்னராக தமிழிசை – டிசம்பரில் தமிழக பாஜக புதிய தலைவர்

by on September 1, 2019 0

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து… “பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டியம் உள்பட நான்கு மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக பா.ஜனதாவுக்கு புதிய […]

Read More

மத்திய அமைச்சரைத் தொடர்ந்து மாநில அமைச்சர் இல்ல நிகழ்வில் எஸ்.வி.சேகர்

by on June 18, 2018 0

பெண் பத்திரிகயாளர்களைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளான எஸ்.வி.சேகரைப் பற்றிப் போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் சில நாள்கள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார். அதன்பின் சென்னைக்கு வந்தவர் பல இடங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தும் அவரைப் போலீஸ் இன்னும் கைது செய்யாமலிருப்பதற்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு […]

Read More

3-வது முனையமானது தாம்பரம் ரயில் நிலையம் – நெல்லைக்கு புதிய ரயில்

by on June 8, 2018 0

சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் சென்னையில் இருக்க, மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 49 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இன்று தாம்பரத்தில் மூன்றாவது முனையம் தொடங்கப்பட்டது.   இந்த முனையத்தை மத்திய ரயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு செல்லும் ‘அந்த்யோதயா’  ரயிலையும் அவரே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் முழுவதும் […]

Read More

கர்நாடகாவில் காலா திரையிடக் கூடாதென்பது என்ன நியாயம் – பொன். ராதாகிருஷ்ணன்

by on June 2, 2018 0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதிலிருந்து… “கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்குத் தீர்வு தந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கையெழுத்திட்ட நிதின் கட்காரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. அந்த […]

Read More