சமூக.விரோதச். செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட பழங்குடியின மக்களைக் காப்பாற்றப் போராடும் நாயகனின் கதை. யானைகளின் தந்தங்களை இலங்கைக்குக் கடத்தும் வேலையைச் செய்து வருகிறார் சுனில். அதில் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அந்த வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியின மக்களையும் தன் அடிமைகளாக வைத்து தந்தக் கடத்தல் வேலையைச் செய்து வருகிறார். ஆனால், அந்தக் கடத்தல் வேலையைத் தன் வசப்படுத்த நினைக்கும் அரசியல் செல்வாக்குள்ள கபீர் துகான் சிங், ஒலியின் உதவியுடன் சுனில் கடத்தும் தந்தங்களைப் பிடிக்கிறார். […]
Read Moreமம்பட்டியான் திரைப்படத்தின் முரட்டுத்தனமான மண் வாசனையையும், கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும் நினைவூட்டும் வகையில் உருவாகியிருக்கும் இந்த மம்பட்டியான் ஸ்டார்ஸ் தொடர், ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை சமநிலையுடன் கலந்து வழங்க முயற்சிக்கிறது. கதை நகரும் விதத்தில் கிராமத்து அரசியல், நட்பு, துரோகம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகள் முக்கிய இடம் பெறுகின்றன. தொடக்க எபிசோடுகள் சற்று மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளில் திரைக்கதை வேகம் பெறுகிறது. சில திருப்பங்கள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், சில காட்சிகள் எதிர்பாராத தாக்கத்தை […]
Read More“அங்கீகாரம்” என்பது வெறும் சமூகப் பிரச்சினையைப் பேசும் படமாக இல்லாமல், ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏங்கும் அங்கீகாரம் என்ற உணர்வை மையமாகக் கொண்டு நகரும் உணர்வுப்பூர்வமான படைப்பு. கதையை சொல்லியிருக்கும் விதம் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது. தனிமனித போராட்டமாக மட்டுமில்லாமல் சமூக உறவுகள், சுயமரியாதை எல்லாம் கலந்த திரைக்கதை, கதையாக சொல்லுவதற்கே பயன்பட்டுள்ளது. கதை இப்படிப் போகிறது… விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள […]
Read More‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மாதிரி ‘போற போக்குல ரெண்டு காதலு’க்கு ஆளாகிறார் நாயகன் சனத். ஜெய்ப்பூரில் தொடங்குகிறது கதை. அங்கே தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றுகிறார் நாயகன் சனத். அவர் மீது ஐடி துறையில் பணியாற்றும் இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், “நோ.!” சொல்கிறார் சனத். அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது முதல் காதலின் பிரிவு. அது ஏற்படுத்திய வலியை மீண்டும் தன்னால் அனுபவிக்க முடியாது என்று இமயாவின் காதலை மறுக்கிறார் அவர். ஆனால் […]
Read Moreசத்தியம் செய்வது முக்கியமில்லை – அந்த சத்தியத்தின் படி நடக்க வேண்டும் என்று உணர்த்தும் படம். வேலூர் மாவட்டத்தில் நடக்கும் கதை. அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் சேகரன் நல்ல உள்ளம் படைத்தவர். அதிலும் சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள் மீது அக்கறை கொண்டவர். இருப்பினும் மகிழ்ச்சி, சோகம் எது வந்தாலும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். ஓரளவு வசதியான நடத்துற வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அவர், கல்லூரி மாணவியான நதியா சோமுவை […]
Read Moreவஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை. கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார். அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க […]
Read More