நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன.
இதில், ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 எம்பி-களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரம் உண்டு.
இந்திய நாட்டில் “அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம்” உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை பிரதமர், அமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவும் மாநிலங்கவையில் நியமன எம்.பிக்களாக இன்று ஆயினர்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவை வாழ்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
“சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.
மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகாக பிரதிபலித்தவர் இளையராஜா.
அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் டிவிட்டர் செய்தியில்…
“மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்..!” என்றும்
கமல் டிவிட்டரில்…
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்..!” என்றும் வாழ்த்தி இருக்கின்றனர்.