April 20, 2024
  • April 20, 2024
Breaking News
July 20, 2022

நீட் விலக்கு பற்றிய எம்பி வெங்கடேசன் கேள்விக்கு மத்திய இணை மந்திரி பதில்

By 0 414 Views

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும், நீட் விலக்கு சட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 02.05.2022 அன்று வந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறைபடி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் தங்களின் கருத்துக்களை அளித்து விட்டதாகவும், அவற்றை தமிழக அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 அன்று பகிர்ந்து கொண்டு கருத்துக்களை விளக்கங்களை கேட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும் என்றும், ஒப்புதலுக்கு காலவரையறை நிர்ணயிக்க இயலாது என்றும் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.