May 10, 2021
  • May 10, 2021
Breaking News

Tag Archives

தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் மோடிக்குக் கடிதம்

by on May 7, 2021 0

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமானதாகும். தொடர்ந்து தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார்.    பதவி ஏற்றதும் அவரது தந்தை கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். […]

Read More

அதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

by on April 8, 2021 0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து  இருக்கிறது. முக்கியமாக மராட்டியம்், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் […]

Read More

5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி

by on September 22, 2020 0

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் அளித்துள்ள பதிலில்…   பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது…’’ என்று கூறி உள்ளார்.   பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் […]

Read More

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை விரைவில் ஊரடங்கு பற்றி புதிய அறிவிப்பு

by on April 27, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.   6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனினும் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், அறிவித்துள்ளபடி மே 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக சில மாநிலங்கள் அறிவித்து உள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.   […]

Read More

இன்றைய (22 ஏப்ரல் 2020) முக்கிய செய்திகள் ஒரு தொகுப்பு

by on April 22, 2020 0

மே மாதத்தின் மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று டைம்ஸ் நெட்வொர்க் பிரொட்டிவிட்டி அமைப்புடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது – ஐசிஎம்ஆர் விளக்கம். மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை – மத்திய அரசு அதிரடி. கர்நாடகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிப்பு : அத்தியாவசிய சேவைகள் […]

Read More

ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி 27- ல் மீண்டும் கலந்துரையாடல்

by on April 22, 2020 0

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   அனைத்துநாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு  உள்ளது.   கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த […]

Read More

லஷ்மி ராமகிருஷ்ணனை ஷாக் அடைய வைத்த படம்

by on April 13, 2020 0

இயக்குனர், நடிகை மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டதாக சொல்லி இருந்தார். அதில் பிரதமர் மோடி எதையோ எழுதிக் கொண்டிருக்க, அவர் தோளைப் பற்றியபடி ஸ்ரீராமர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படம் இருந்தது. இந்தப் படம் இணையத்தில் நேற்று வைரல் ஆனது. இது குறித்துதான் லட்சுமி ராமகிருஷ்ணன் பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘இந்தப் படத்தை FB-யில் பார்த்தேன், இதை யார் டிசைன் செய்திருந்தாலும் அவர்களுக்கு […]

Read More

புடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்

by on April 5, 2020 0

புடிச்சா பண்ணு, புடிக்கலயா கிளம்பு! நசநசனு பெரிய நாசா விஞ்ஞானி கணக்கா கருத்து சொல்லிக்கிட்டு!  கை தட்டுதல், விளக்கு ஏற்றுதல், இவையெல்லாம் உணர்வின் வெளிப்பாடு. எண்ணம் ஒன்றுபட்டால் யாவும் நிகழும் என்ற நம்பிக்கை சார்ந்த செயல்கள்! பல மதங்களில் இருக்கு! பகுத்தறிவாதி என்று மார் தட்டுபவர்களும் நினைவுநாள் அன்று தலைவர்கள் படம், சமாதி முன் பூத்தூவி விளக்கேற்றுதல், பிறந்தநாள் அன்று விளக்கேற்றுதல் என்று இதெல்லாம் ஒரு மரபாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது! இப்படி நம் அன்றாட வாழ்வில் […]

Read More

பிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா?

by on April 4, 2020 0

நம்ம நாடெங்கும் கொரோனா என்னும் வைரஸ் எக்கச்சக்கமா பரவிவருவதால் மக்கள் அனைவரையும் இம்மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கினை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி சொல்லியிருக்கும் நிலையில் கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது சில வேண்டுகொள்கள் வைக்கிறார். அப்படி நாளை ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் கையில் மெழுகு வத்தியையோ ஒளிரும் பொருள்களையோ வைத்துக்கொண்டு ஒவ்வொரு இந்தியனும் தங்களது பால்கனியில் வந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டார். […]

Read More