February 15, 2025
  • February 15, 2025
Breaking News
April 8, 2021

அதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

By 0 582 Views

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து  இருக்கிறது.

முக்கியமாக மராட்டியம்், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிகிறது.
 
முன்னதாக கடந்த 6-ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார்.