December 1, 2021
  • December 1, 2021
Breaking News

Tag Archives

ஒமிக்ரான் கொரோனா பரவல் – கவனமாக இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

by on November 29, 2021 0

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிலிருந்து… 1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது. 2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.   3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.   4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.   5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா […]

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை

by on April 12, 2021 0

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர […]

Read More

அதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

by on April 8, 2021 0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து  இருக்கிறது. முக்கியமாக மராட்டியம்், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் […]

Read More

கொரோனா பரவல் – தமிழகத்தில் ஏப் 6க்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள்

by on March 30, 2021 0

தமிழ்நாட்டில் நேற்று 2,279 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 7,960 பேரும், தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடும் 9 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டும் உள்ளது. கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாவதை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய […]

Read More

சூர்யாவின் டிவீட்டால் கோலிவுட்டில் அதிர்ச்சி அலை

by on February 7, 2021 0

கொஞ்ச நாள் முன்பு நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் வெகு விரைவிலேயே அந்த செய்தி நம்பகத்தன்மை அற்றது என்பது உறுதியானது. ஆனால், சற்று நேரத்துக்கு முன்பு அவரது மகனும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் டிவீட் கோலிவுட்டில் மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ட்விட்டில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து குணம் அடைந்து இருப்பதாக […]

Read More

இது ஒரு கொலை முயற்சி – விஜய் சிம்புவுக்கு மருத்துவர் ஒருவரின் வைரலாகும் வேதனைக் கடிதம்

by on January 6, 2021 0

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. […]

Read More

தமன்னாவையும் விடாமல் தாக்கிய கொரோனா

by on October 4, 2020 0

படப்பிடிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் நடிக நடிகையர் மிகவும் கவனத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படப் பிடிப்பில் ஈடுபடும் எல்லா தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பு தேவை பட்டாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து பணி புரியலாம். ஆனால் நடிகர் நடிகையருக்கு மாஸ்க் அணிந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் […]

Read More

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

by on October 2, 2020 0

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலை மாறி தற்போது 1200-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூர் மண்டலம் தவிர 14 மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 20-ந்தேதி 759 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 30-ந்தேதி 1103 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாததே என்று அதிகாரிகள் தெரிவித்தனர். […]

Read More

கொரோனா பாதித்த நிக்கி கல்ராணியின் அனுபவங்கள்

by on August 13, 2020 0

கொரோனா பாதிப்பில் இது நட்சத்திரங்களின் சீசன் போலிருக்கிறது இந்தியா முழுவதிலும் அனேக சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் நட்சத்திரங்களையும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்தவகையில் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி யையும்  கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார். “கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அது எனக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட தந்தது. மற்ற கொரோனா நோயாளிகளை போலவே எனக்கும் […]

Read More

அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்

by on August 5, 2020 0

எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு ‘அக்கா என்னும் அம்மா ‘ ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர். கடந்த 10.07.2020 அன்று அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 17-07-2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று(05-07-2020) காலை10.25 மணியளவில் காலமாகிவிட்டார். மீண்டு வந்துவிடுவார் என்று வலுவான நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த ஜூலை 22ஆம் நாள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த […]

Read More