April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
October 2, 2020

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

By 0 490 Views

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலை மாறி தற்போது 1200-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூர் மண்டலம் தவிர 14 மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது.

கடந்த 20-ந்தேதி 759 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 30-ந்தேதி 1103 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாததே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் கோடம்பாக்கத்தில் 1279, அண்ணாநகரில் 1188, தேனாம்பேட்டையில் 1147 என பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளன. குறைந்த அளவு பாதிப்பாக மணலியில் 221, திருவொற்றியூர் 300, சோழிங்க நல்லூர் 322 ஆக உள்ளது. தண்டையார் பேட்டையில் 766 பேர், ராயபுரத்தில் 885, திரு.வி.க.நகரில் 972, அம்பத்தூரில் 817, அடையாரில் 1072 என பாதிப்பு அதிகரித்து வருகிறது.

“தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ளதுடன் தளர்வுகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது முககவசம் கட்டாயம் அணியவேண்டும்.

தளர்வு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் தொற்று கூடி இருப்பது எதிர்பார்த்தது தான். ஆனாலும் வேலை செய்யும் இடங்கள் மூலமாக தற்போது தொற்று அதிகரிக்கிறது.

அந்த பகுதிகளில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அந்த பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பணி செய்யும் இடங்களில் பின் பற்றவேண்டிய விதிமுறைகளையும் கண்காணிக்கிறார்கள்…” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கடந்த 20-ந்தேதி கொரோனா பாதிக்கப்பட்ட 9,706 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். 30-ந்தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 11,320 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 11,615 பேர் (7 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.