September 27, 2020
  • September 27, 2020
Breaking News

Tag Archives

கொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்

by on September 15, 2020 0

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார்.    விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட்  பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.   சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று […]

Read More

கொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு

by on September 8, 2020 0

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.  தமிழகத்தின்் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா […]

Read More

கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

by on August 30, 2020 0

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் […]

Read More

கொரோனா பாதித்த நிக்கி கல்ராணியின் அனுபவங்கள்

by on August 13, 2020 0

கொரோனா பாதிப்பில் இது நட்சத்திரங்களின் சீசன் போலிருக்கிறது இந்தியா முழுவதிலும் அனேக சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் நட்சத்திரங்களையும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்தவகையில் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி யையும்  கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார். “கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அது எனக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட தந்தது. மற்ற கொரோனா நோயாளிகளை போலவே எனக்கும் […]

Read More

அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்

by on August 5, 2020 0

எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு ‘அக்கா என்னும் அம்மா ‘ ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர். கடந்த 10.07.2020 அன்று அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 17-07-2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று(05-07-2020) காலை10.25 மணியளவில் காலமாகிவிட்டார். மீண்டு வந்துவிடுவார் என்று வலுவான நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த ஜூலை 22ஆம் நாள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த […]

Read More

நான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ

by on August 5, 2020 0

50 ஆயிரம் பாடல்களுக்குகு மேல் பாடி சாதனை படைத்த தமிழ் பட உலகின் முடிசூடா பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும் அது குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் முழுமையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும் சில நாட்களில் குணம் பெற்று […]

Read More

வனிதா கேசை பிடிக்கப்போய் கொரோனா வந்து சேர்ந்தது

by on July 26, 2020 0

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி. தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு உட்பட்ட சூர்யா தேவிக்கே கொரானா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர ரேணுகாவுக்கும் கொரோனா […]

Read More

கொரோனா பாதிப்பில் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் – இஸ்ரேல் சோகம்

by on July 13, 2020 0

இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து தனிமையால் வாடும் அந்நாட்டு மக்களிடம், மரங்களிடம் அன்பு செலுத்துமாறு அப்போலோனியா தேசிய பூங்கா ஊழியர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். அதன் விளைவால் அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர். ‘கொரோனா பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கட்டியைணைக்க முடியவில்லை. மரங்களை கட்டியணைப்பது மனதிற்கு […]

Read More

செப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்

by on July 11, 2020 0

தற்போது ‘மாஸ்டர் ‘ உள்ளிட்ட படங்களிலும், ‘ரோஜா ‘ சீரியலிலும் நடித்து வருகிறார் பிரபல நடிகர்  ராஜேஷ். நடிப்பைத் தாண்டி ஜோதிடம், ஆவிகளுடன் பேசுதல், Premonition போன்ற Parallel Science ல் ஏராள தரவுகள் வைத்திருக்கும் ராஜேஷ் இப் போதைய கொரோனா பிரச்சினை இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தனக்குத் தெரிந்த ஜோதிடம் மூலம் ஆறுதல் வார்த்தை கூறுகிறார். “இந்த (ஜூலை) 16 ம் தேதி சூரியன் கடகத்திற்கு மாறுகிறது. அதன் பின் கொரோனா பிரச்னை […]

Read More

கொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை

by on July 6, 2020 0

சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பையும், மரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது.    கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின்  இரண்டாவது அலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.   இந்நிலையில கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   நேற்று முன்தினம் சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது […]

Read More