June 30, 2025
  • June 30, 2025
Breaking News
May 6, 2021

கொரோனாவில் இயற்கை எய்திய பாண்டு பற்றிய சர்ச்சை

By 0 597 Views

நாளுக்கு நாள் நாட்டில் பெருகி வரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் விண்ணை எட்டிக் கொண்டிருக்கிறது. 

நகைச்சுவை நடிகரும் ஓவியருமான திரு பாண்டு இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 74 வயது. அவரது மனைவி குமுதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மிகவும் நல்ல மனம் படைத்த திறமைசாலியான பாண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு பிரபு, பஞ்சௌ மற்றும் பிண்டு ஆகிய மூன்று மகன்கள் இருக்கிறார்கள். 

பாண்டு நடத்தி வந்த கேபிட்டல் லெட்டர்ஸ் நிறுவனத்தின் மூலமாக பல பெரிய நிறுவனங்களுக்கு லோகோக்களை வடிவமைத்துக் கொடுத்தவர். இந்த விஷயத்தில்தான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. 

பாண்டுதான் அண்ணா திமுக கொடிக்கான லோகோவை உருவாக்கியவர் என்று பரவலாக பகிரப்பட, நடிகர் சங்க இரங்கல் செய்தியிலும் அப்படியே பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அண்ணா திமுக கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து என்று விரம் அறிந்தவர்கள் கூற நடிகர் சங்கம் முன்வந்து மேற்படி செய்தியை திருத்தி வெளியிட கேட்டுக் கொண்டது.

ண்ஹடிகர் சங்கப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு நடிகரைப் பற்றிய தகவல் தருவதில் சரியான தகவலைப் பெற்று இரங்கல் செய்தி வெளியிட வேண்டாமா..?