October 30, 2026
  • October 30, 2026
Breaking News
August 17, 2021

நண்பர்களுக்கு நடிகை ஷெரீனின் ஷாக் வேண்டுகோள்

By 0 678 Views

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் அதற்கு பின் பெரிய அளவில் எந்த படத்திலும் பெயர் வாங்கவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்கினால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அளவில் அந்த முயற்சியையும் செய்து பார்த்தார். அப்போதும் அவர் கைவசம் படங்கள் இல்லை.

இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தன் சமூக வலைதள பக்கங்களில் அவரே இதனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்களையும் கவனமாக இருக்கச் சொல்லியும் பரிசோதனை செய்து கொள்ளச் சொல்லியும் பிறருக்கு தொற்று ஏற்படுத்தி விடாமல் இருக்கவும் வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.