December 3, 2023
  • December 3, 2023
Breaking News
December 22, 2022

கொரோனா தொற்றுக்கு அமெரிக்க பலி 11 லட்சம்

By 0 223 Views

உலகில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வெலுவேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகளின்படி… உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது.

அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்து விட்டது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும்.

இந்தத் தொற்றால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது. அங்கு இதுவரை சரியாக 10 லட்சத்து 88 ஆயிரத்து 280 பேர் இறந்துள்ளனர்.