October 5, 2024
  • October 5, 2024
Breaking News
April 22, 2020

இன்றைய (22 ஏப்ரல் 2020) முக்கிய செய்திகள் ஒரு தொகுப்பு

By 0 675 Views

மே மாதத்தின் மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று டைம்ஸ் நெட்வொர்க் பிரொட்டிவிட்டி அமைப்புடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது – ஐசிஎம்ஆர் விளக்கம்.

மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை – மத்திய அரசு அதிரடி.

கர்நாடகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிப்பு : அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதி.

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி.

கொரோனாவிற்கு எதிரான பிளாஸ்மா சிகிச்சைக்கு இஸ்லாமியர்களிடம் ரத்தம் சேகரிக்க குழு அமைத்தது தப்லீக் ஜமாத்.

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – முதல்வர் பழனிசாமி.

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல்.

ரேசன் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் பரிசோதனைக் கூடத்தில் இருக்கும் குரங்கு மற்றும் எலிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வெற்றிகரமாக கொடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஏப்.27ஆம் தேதி அனைத்து மாநில முதல்வரகளுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு – பேராயர் ஜார்ஜ் அந்தோணி.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை – பிரதமர் மோடி

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்கும் ? : திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி.

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி : பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது.

ஈரோடு : பெருந்துறை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் டிஸ்சார்ஜ்.

கொரோனாவிலிருந்து குணமடைந்து ஈரோட்டில் வீடு திரும்பியுள்ள 28 பேரும் 14 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க அறிவுரை.

ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் ரூ.43,500 கோடி முதலீடு – இந்திய தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய முதலீடு.

கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி.

கொரோனா பாதிப்பு காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ரத்து.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2700-க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுமி உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதி.

சென்னையிலிருந்து கோவைக்கும் பார்சல் ரயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

ஊரடங்கு காரணமாக திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோயில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவிப்பு.

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், பிரசவத்துக்கு முன்பு பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டுமென்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு பணிக்கு சென்ற தமிழக அதிகாரிகள் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காஷ்மீருக்குள் அனுப்பும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது – ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு.