மத்திய அரசு மே 14-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வரைவு செயல் திட்டம் பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது – காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் 2018 என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ந் தேதி ஒரு வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று […]
Read Moreதினமும் விலை ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் மாநில வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் கூறப்பட்டது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 நாட்களில் […]
Read Moreவெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன..! அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா..? தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது […]
Read Moreபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், […]
Read Moreஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (13.05.2018) விவசாய சங்சங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். […]
Read Moreதமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு புதிய பாதையையும் வகுத்தவர். அந்த வகையில் அவரது சொந்தப்பட நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஞ்சலி, சுனைனாவுடன் கிருத்திகா உதயநிதி […]
Read Moreஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து ‘நடிகையர் திலகம்’ என்றறியப்பட்ட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு. அவர் வாழ்க்கை முடிந்த எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கும் கதை. அப்போதுதான் பத்திரிகையில் சேர்ந்த சமந்தா, சாவித்ரியின் வாழ்வைக் கட்டுரையாக்கச் செய்யும் ஆய்வில் அப்பாவின் முகம் கூடத் தெரியாமல் அம்மாவின் அரவணைப்பில் ஒரு நடிப்பு விலாசம் பெற சாவித்ரி மேற்கொண்ட போராட்டம், அந்தப் போராடத்துக்குள் ஜெமினி கணேசனுடன் காதல் மலர்ந்து அவரைக் காதல் […]
Read More