January 15, 2025
  • January 15, 2025
Breaking News
May 19, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி கட்டணம் உயரும் அபாயம்

By 0 1072 Views

தினமும் விலை ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் மாநில வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் கூறப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் 1 ரூபாய் 35 காசு, டீசல் 1 ரூபாய் 48 காசு உயர்ந்துள்ளது. இன்று மட்டும் பெட்ரோல் 32, காசு டீசல் 25 காசு உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் என்று அறியப்படும் நிலையில் இந்த விலை உயர்வால் கால் டாக்சி கட்டணத்தை உயர்த்துவது குறித்து அந்தந்த சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருவது வாடிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.