October 10, 2024
  • October 10, 2024
Breaking News
May 15, 2018

கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

By 0 1156 Views
               இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில்  வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
               நேற்று முன்தினம் (13.05.2018) விவசாய சங்சங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். 
 
               விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆர்.நல்லகண்ணு, திமுக  தலைமையில் 9 அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை அவர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
               இந்த சந்திப்பில் அவர் மாநாட்டில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ  ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
(இரா.முத்தரசன்)
 
மாநில செயலாளர்