நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. தேர்தல் பரப்புரை பணிக்காக அவர் ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜே.ஜே. ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழில் ‘சின்னபுள்ள’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார்.
2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் அவர்…
Read More
மத்திய, மாநில அரசுகள் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் மேற்கொள்ள திட்டமிட்டன. இதற்காக காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதனை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டங்கள் நடந்தன. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின்…
Read More
‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து தரக்குறைவாக ராதாரவி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து ராதாரவியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதன் எதிரொலியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு நடிகர் ராதாரவி…
Read More
ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், உத்தப் பிரதேசம் மாநிலங்களில் தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை என மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது. இந்நிலையில் பிஸ்கட், சாக்லேட், சாம்பூ மற்றும் அழகு…
Read More
இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குவது தெரிந்த விஷயம்தானே..? சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ‘குண்டு’ படத்தையும் தயாரித்து வருகிறார் .
இந்நிலையில் தனது ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர் ‘சாண்டி’யின் நடனத்தில் ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது, ‘மகிழ்ச்சி’ என்று துவங்கும் இந்த பாடலில்…
Read More
பொள்ளாச்சி புரவிபாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல், அதன் ஒரு பகுதியாக நடந்த பூஜையில் கைக்கட்டியபடி நின்றிருந்தார்.
அப்போது மணியடித்து தீப ஆரத்தி எடுத்து பூஜை செய்த பூசாரி தீபத்தட்டை நீட்டியபோது இரு கரம் கூப்பி வணங்கிய கமல், பூசாரி விபூதியை எடுத்து அவர் நெற்றியில் வைத்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
அந்த அபூர்வ வீடியோ கீழே…
Read More