February 15, 2025
  • February 15, 2025
Breaking News
January 24, 2019

பா.இரஞ்சித் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பும் மகிழ்ச்சி பாடல் வீடியோ

By 0 1257 Views

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குவது தெரிந்த விஷயம்தானே..? சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ‘குண்டு’ படத்தையும் தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் தனது ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர் ‘சாண்டி’யின் நடனத்தில் ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது, ‘மகிழ்ச்சி’ என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் , லிங்கேஷ், ஹரி, சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் .

‘மகிழ்ச்சி’ ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான்..!

கீழே மகிழ்ச்சி பாடல் வீடியோ…