January 21, 2025
  • January 21, 2025
Breaking News
April 13, 2019

நடிகர் முன்னாள் எம்பி ஜேகே ரித்தீஷ் மரணம் வீடியோ

By 0 1013 Views

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. தேர்தல் பரப்புரை பணிக்காக அவர் ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஜே.ஜே. ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழில் ‘சின்னபுள்ள’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார்.

2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் அவர் இணைந்தார். 

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் முனைப்புடன் இவர் செயல்பட்டு வந்தார். கடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் களம் கண்ட இவர், முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.

ராமதநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் ஓய்வில் இருந்தார். அப்போது அவருடைய உடல் அசைவற்று இருக்கவே வீட்டில் இருந்த பணியாளர்கள் அவரை ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு ஜே.கே. ரித்தீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய மரணம் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வீடியோ…