August 11, 2026
  • August 11, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தியேட்டர் திறந்தாலும் மாஸ்டர் வேண்டாம் – முதல்வருக்கு வேண்டுகோள்

by by Jun 4, 2020 0

திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள்…

Read More

மக்கள் மீதான சுமையை மின் வாரியமும் அரசும் இறக்கி வைக்கட்டும் – பிரசன்னா

by by Jun 4, 2020 0

சில நாட்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரசன்னா “இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்..?” என்று கேட்டிருந்தார்.

பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் நேற்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை…

Read More

வைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ

by by Jun 3, 2020 0

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை இளம்பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.

அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் சிறிய பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கமெண்டுகளும் பறக்கின்றன.

இதே போல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி போன வருசம் வைரலாக்கினர் நெட்டிசன்கள்.

டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினரின்…

Read More

கொரோனா பிடியில் சிக்கிய சின்னத்திரை நடிகை குடும்பம்

by by Jun 2, 2020 0

இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் அவர் மற்றும் கணவர், ஐந்து வயது மகன், மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் கொரோனா வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்தது.

இதுபற்றி தற்போது அவர் மௌனம் கலைத்தார்.  அவர் கூறும்போது “தூங்க முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்தினரில் முக்கியமாக இளயவர்களுக்கும், வயதானவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.

இப்பொழுது எல்லாம்…

Read More

இசைஞானி அறிவிக்கும் பிறந்த நாள் பரிசு இசை ஓடிடி – வீடியோ

by by Jun 2, 2020 0

Read More

பாலுமகேந்திரா பற்றிய சசிகுமாரின் அழியாத கோலங்கள்

by by Jun 1, 2020 0

திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது.

“ஹலோ சார்…”

“நான் உன்னைப் பார்க்க வரலாமா?”

“சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்”

‘ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?”

நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பாலு மகேந்திரா சாரை நான் முதன் முதலில் பார்த்தது…

Read More

பிந்து மாதவி பிளாட்டில் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்ட சோகம் – வீடியோ

by by Jun 1, 2020 0

‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவர் நடித்த ‘கழுகு 2’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து ‘மாயன்’, ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்து வந்த பிந்துமாதவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தங்கள் ஃபிளாட்டில் எல்லோரும் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக…

Read More

மனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்

by by Jun 1, 2020 0

நடிகர் மனோபாலா தன் யூ டியூப் சேனலுக்காக காமெடி நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார்.

அதில் தன் வாழ்க்கை அனுபவங்களைப் பேசியிருந்த சிங்கமுத்து, இடையிடையே நடிகர் வடிவேலு குறித்தும் சில கமெண்ட்டுகளை இடைச்செருகல் ஆகப் போட்டிருந்தார்.

அதே சமயம் ”வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய்விட்டார்” எனச் சொல்லியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கும் வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ”அந்த வழக்கு முடிய 10 வருஷம் ஆகலாம்’’ என்று குறிப்பிட்டதுடன்,…

Read More

அடுத்த ஓடிடி வெளியீடு நெட்பிளிக்ஸ் – அட்லீ தயாரிப்பில்..?

by by May 31, 2020 0

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தகாரம் திரைப்படத்தின் உரிமையை நெஃட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘அந்தகாரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது….

Read More

ஐஸ்வர்யா தத்தா அழகு மிளிரும் புகைப்பட கேலரி

by by May 31, 2020 0

Read More